ரோகித் ஹெட்டுக்கு எதிரா இந்த பிளான் பண்ணுங்க.. நியூசிலாந்து இதைத்தான் செஞ்சாங்க – ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை

0
204
Gilchrist and Travis Head

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்டுக்கு என்ன மாதிரியான திட்டத்தை இந்திய அணி கொண்டு வர வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி காபா மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

இந்தியாவிற்கு தலைவலியான ஹெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தனி ஒரு வீரராக பெரிய அச்சுறுத்தலை முக்கியமான போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் கொடுத்து வருகிறார். இதுவரை இரண்டு உலகக் கோப்பைகளை அவர் இந்தியாவின் கைகளில் இருந்து பறித்து விட்டார் என்று கூறலாம்.

மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 141 பந்துகளில் அதிரடியாக 140 ரன்கள் எடுத்து இந்திய அணி படுதோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார். எனவே அவரை கட்டுப்படுத்த வேண்டியது இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து செய்ததை செய்யுங்கள்

இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “இந்திய அணிக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே நடக்கும் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்திய அணி அவருக்கு எதிராக ஷார்ட் பால் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து கொண்டு வராதது எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க : இரண்டே முறைதான் நடந்திருக்கு.. டேவிட் வார்னர் தன்னை விமர்சித்ததற்கு லபுசேன் பதிலடி.. என்ன நடந்தது?

“நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு இன்னிங்ஸ்களில் அவர் 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர்கள் அவருக்கு எதிராக ஷார்ட் பந்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினார்கள். நீங்கள் இப்படியான பந்துவீச்சு வியூகத்தை வைக்கும் பொழுது அவர் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்கவே செய்வார். ஆனால் இறுதியில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அவருக்கு இப்படியான பந்துகள் சிரமம் தந்தாலும் ரண்களுக்காக அவர் ரிஸ்க் எடுக்க வேண்டியது வரும். எனவே உங்களுக்கு விக்கெட் வாய்ப்புகள் உண்டு” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -