ரோஹித்துக்கு இந்த திறமை ஒரு வரப்பிரசாதம்.. கொஞ்சம் கூட கஷ்டம் இல்லாமல் இதை செய்வார் – அஜய் ஜடேஜா பேட்டி

0
159

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் பேட்டிங் திறன்

இந்த தொடர் முழுவதுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, ஒரு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துவிட்டு வெளியேறி வந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்டத்தை நீண்ட நேரம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாகவும் செயல்பட்டார். இதனால் வேகம், சுழல் என அனைத்தையும் ஒரே மாதிரியாக எதிர்கொண்டு ரன்களை வேகமாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் குவித்தார்.

83 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 76 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ரோஹித் சர்மாவின் பேட்டிங் செயல் திறன் கண்டு அற்புதமாக பாராட்டி பேசி இருக்கிறார். ரோகித் சர்மாவின் சிக்சர் அடிக்கும் திறன் இயற்கையிலேயே அவருக்கு சிறப்பாக அமைந்திருப்பதாக சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

பாவம் எங்கே செல்வார்கள்

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறும் போது ” ஒரு சில திறமைகள் என்பது வரப்பிரசாதமாகும். அது ரோகித் சர்மாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே காணப்படுகிறது. அவர் பந்தை கடுமையாக அடிக்காமல் நேரத்தை பயன்படுத்தி சிக்ஸர்கள் அடிக்கிறார். அவரது சிக்ஸர்கள் பாயிண்டில் இருந்து டீப் பைன் லெக் வரை உள்ளன. ரோகித் சர்மா குறிப்பாக எல்லா இடங்களிலும் விளையாடுகிறார். ஒரு பந்துவீச்சாளரால் எங்கு அவரிடம் இருந்து தப்பிக்க முடியும்.

இதையும் படிங்க:உங்களின் இந்த கேள்வி.. என் சம்பளத்தை விட மிக அதிகம்.. இதுக்கு என்ன சொல்வது.. ஹர்திக் பாண்டியா சுவாரஸ்யம்

ஒரு பேட்டர் ஒரே இடத்தில் தொடர்ந்து அடித்தால் அவருக்கு அந்த திசையில் நீங்கள் பந்து வீசாமல் இருப்பீர்கள். ஆனால் ரோகித் சர்மா எல்லா திசையிலும் அடிக்கக் கூடிய வீரராக இருக்கிறார். ரோஹித்துக்கு இடைவெளி கொடுத்தால் அவர் பாயிண்ட் திசையில் அடிப்பார் கவர் திசையில் அடிப்பார், மிட் விக்கட் திசையை நோக்கி அடிப்பார், நேராகவும் அடிப்பார், அவர் சீமர்களை தேர்ந்தெடுக்கும் விதம் விதம் குறிப்பாக அவர்களது லென்த்தை ரோகித் சர்மா தேர்வு செய்வதால் இவரிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது, பாவம் எங்கே செல்வார்கள்? என்ன ஜடேஜா பேசியிருக்கிறார்.

- Advertisement -