இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்தது குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இந்திய அணி குறித்து ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணி சில பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்த நிலையில், போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. எனவே இந்திய அணி முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை ஒரே மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடுவதால் அந்த அணிக்கு அதிக நன்மைகள் தருகிறது என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.
அதற்கு இந்திய அணி வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் செயல்பாடு குறித்தும், தனது செயல் திறன் குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
என் சம்பளத்தை விட அதிகம்
இது குறித்து ஹர்திக் பாண்டியா விரிவாக கூறும்போது ” இந்த அணி ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் இயங்கும் அணி கிடையாது. இது டீம் இந்தியா ஒற்றுமையாக இயங்கக்கூடிய அணி. எல்லோராலும் ஆட்டத்தை முடிக்க முடியும் ஏதாவது மாயாஜாலம் செய்ய முடியும் என்று நம்புகிறோம். துபாயில் வசிக்கும் பாகிஸ்தானிய மக்கள் நாங்கள் விளையாடியதை ரசித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் ஏன் பாகிஸ்தான் செல்லவில்லை என்ற கேள்வி என் சம்பளத்தை விட மிக அதிகமாகும்.
இதையும் படிங்க:விராட் ரோஹித் இல்லை.. ODIல் இனி நம்பகமான வீரர் இவர்தான்.. அற்புதமா ஆடுறாரு – அனில் கும்ப்ளே புகழாரம்
நாங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுக்காக இணைந்துள்ளோம். நீங்கள் பூஜ்ஜியம் அடித்தாலும் சரி, அணி வெற்றி பெறும் போது அது ஒரு பொருட்டாக இருக்காது. நான் எப்போதும் வெற்றி பெறுவதற்காக கிரிக்கெட் விளையாடுகிறேன். இது ஒரு உரையாடல் அல்ல, எனது அணியை நான் எப்போதும் மேல் வைத்துள்ளேன். ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடினாலும், விளையாட விட்டாலும் அணி நன்றாக இருக்க வேண்டும். இந்த மனநிலை எனக்கு கஷ்டங்களில் இருந்து உதவியது. சவால்களில் இருந்து ஓடக்கூடாது என்பதை கற்றுக் கொடுத்தது” என்று பாண்டியா பேசியிருக்கிறார்.