இந்தியாவுக்கு சிறப்பான வெற்றிதான்.. ஆனால் இந்த காரணத்தால் ரோஹித் சந்தோசப்பட மாட்டார் – அஜய் ஜடேஜா கருத்து

0
1720
Jadeja

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சிறப்பாக விளையாடி வென்றாலும் கூட குறிப்பிட்ட காரணத்திற்காக ரோகித் சர்மா மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் என இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 235 ஓவர்களுக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட, இந்திய அணி தனது அதிரடியான பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட, போட்டிக்கு உயிர் கொடுத்து வென்று சரித்திர சாதனை படைத்திருக்கிறது. கேப்டனாக ரோகித் சர்மா நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

- Advertisement -

ரோகித் சர்மா ஏமாற்றம் அடைவார்

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறும் பொழுது “இந்த விஷயத்தை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம். எத்தனை வருடங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா ஒருவர். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்களை அடித்தவர். இன்னொரு பக்கத்தில் பார்க்கும் பொழுது அவர் ஒரு கேப்டன். அவர் முதல் இன்னிங்ஸில் அடித்த மூன்று சிக்ஸர்களுக்கு பிறகு ஆட்டம் எப்படி மாறியது? என்று பார்த்தோம்”

“என்னை பொருத்த வரையில் நான் இதைவிட ரோகித் சர்மாவை தனிப்பட்ட முறையில் பெரிய பேட்ஸ்மேன் ஆக கருதுகிறேன். அவரிடமிருந்து பெரிய ஸ்கோர்களை தினமும் எதிர்பார்க்க முடியாது. இந்தத் தொடரை பார்க்கும் பொழுது அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா எதையும் செய்யவில்லை. எனவே ஒரு பேட்டராக ரோகித் சர்மா ஏமாற்றம் அடைவார்”

- Advertisement -

ரோகித் சர்மா தகுதியை குறைக்க கூடாது

மேலும் பேசிய அஜய் ஜடேஜா “ரோகித் சர்மா 50, 100, 150, 200 என்று ஏதாவது பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ரசிகராக ஏமாற்றம் அடைவீர்கள். ஏனென்றால் இது டி20 அல்லது ஒருநாள் போட்டி கிடையாது. ஆனால் ரோகித் ஒருநாள் போட்டிகளில் கூட இரட்டை சதம் அடித்தவர்”

இதையும் படிங்க : கில் ஜெய்ஸ்வால்தான் அடுத்த தூண்கள்.. நிச்சயம் 2 பேரும் அந்த விஷயத்தை செய்வாங்க – அஸ்வின் உறுதி

“எனவே தனிப்பட்ட முறையில் அவர் ஏமாற்றம் அடைந்திருப்பார் ஆனால் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றியில் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஒரு நாளில் 20 ரன்கள் எடுக்கும் பொழுது நாம் அதற்காக மகிழ்ச்சி அடைந்தால், நாம் அவருடைய தகுதியை குறைத்து மதிப்பிடுகிறோம் என்று ஆகிவிடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -