இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால தூண்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருப்பார்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் உறுதியாக கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சதம் அடித்திருந்தார். ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்தும், இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்து ஆட்டநாயகன் விருதும் வென்று இருந்தார்.
2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து இந்தியா வந்திருந்தது. இந்த தொடரில் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் உடன் 712 ரன்கள் குவித்திருந்தார். மேலும் கில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். இருவருமே அணிக்கு முக்கியமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.
சுப்மன் கில்லை ஆரம்பத்திலிருந்து பல வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் எதிர்கால வீரராகவும் அடுத்த விராட் கோலி ஆகவும் இருப்பார் என்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் இந்த பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இணைந்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினை இவர்கள் இருவரையும் பாராட்டி பேசி இருக்கிறார்.
எதிர்காலத் தூண்கள்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பு திறமைசாலி என்று நான் நினைக்கிறேன். மேலும் இதே இடத்தில் கில்லும் இருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடும் வருடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் தூண்களாக இருக்கப் போகிறார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் சீக்கிரத்தில் சாதிக்க போகிறார்கள்”
இதையும் படிங்க : நேற்று இந்திய அணியில்.. இன்று சர்பராஸ் கான் ருதுராஜ் அணிக்கு எதிராக விளாசல்.. ரகானேவும் அபாரம்.. இரானி கோப்பை 2024
“அவர்களுடைய அற்புதமான சோதனை பயணத்தில் நாங்கள் அவர்களை சிறப்பாக தயார்படுத்துவோம். அவர்கள் இருவருமே சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அவர்கள் நிறைய புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்கள் பல விஷயங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் எப்படியான வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம், ஆனால் அவர்கள் மிகத் திறமையானவர்கள் என்கின்ற ஒரு விஷயம் தெளிவான ஒன்று” என்று கூறியிருக்கிறார்