இந்திய அணி ஆஸியை வீழ்த்தி.. உறுதியா கோப்பையை வெல்லும்.. காரணம் இதுதான் – அஜய் ஜடேஜா விளக்கம்

0
62
Ajay

இந்திய அணி உறுதியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இரு அணிகளுக்குமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய தரப்பில் கவலை தரும் அம்சங்கள்

தற்போது இந்திய அணிகள் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் இருவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அவர்கள் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக உள்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இந்திய அணி நியூசிலாந்திடம் இழந்தது.

இன்னொரு பக்கத்தில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் குணமடையாத காரணத்தினால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. முகமது சிராஜ் தன்னுடைய பவுலிங் பார்மை இழந்து கஷ்டப்பட்டு வருகிறார். பும்ராவுக்கு சரியான கூட்டணி இல்லை. இதுவெல்லாம் இந்திய தரப்பை கவலை அடைய வைக்கிறது.

- Advertisement -

இந்திய அணி கோப்பையை வெல்லும்

இதுகுறித்து பேசி இருக்கும் அஜய் ஜடேஜா கூறும்பொழுது “இப்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள தோல்விகள் ஒரு விழிப்புணர்வுக்கானது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றோம். நாம் சிறந்த அணியாக இருக்கிறோம் மேலும் நம்மிடம் சிறந்த கேப்டனும் இருக்கிறார். ரோகித் சர்மா திடீரென கொஞ்சம் குண்டாகி விட்டதாக நான் உணர்கிறேன். இதன் காரணமாக அவரால் சுலபமாக நகர முடியவில்லை”

“ஆஸ்திரேலியா பணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாம் சிறப்பாக செயல்படுவோம். நம்மால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு போக முடியாவிட்டாலும் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லக்கூடிய அளவுக்கு இருப்போம்”

இதையும் படிங்க : ஆஸி பிக் பேஷ் டி20.. 12 ஃபோர் 12 சிக்ஸ்.. மெகா சதம் அடித்த வீராங்கனை.. புதிய சரித்திர சாதனை

“முன்பு இந்தியா எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு சென்று விளையாடியது. எனவே ஒரு அணியில் அங்கு சென்று விளையாடி அனுபவம் கொண்டவர்கள் அப்பொழுது ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பார்கள். தற்பொழுது நிலைமைகள் மாறிவிட்டது. இந்திய அணி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்கிறது. மேலும் நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்கின்ற பொழுது ஆபத்தானவர்களாக இருப்பீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -