ஆஸி பிக் பேஷ் டி20.. 12 ஃபோர் 12 சிக்ஸ்.. மெகா சதம் அடித்த வீராங்கனை.. புதிய சரித்திர சாதனை

0
249
Lizelle

தற்போது ஆஸ்திரேலியாவில் மகளிர் பிக் பேஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடும் தென் ஆப்பிரிக்காவின் லிசெல் லீ மெகா சதம் அடித்து அந்தத் தொடரின் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மகளிர் டி20 தொடர் நடத்தப்படுவது போல ஆஸ்திரேலியாவிலும் இதே முறையில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்கள் மற்றும் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக லிசெல் லீ சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இறுதிவரை நிற்காத அதிரடி

இந்த போட்டிக்கான டாஸில் பெர்த் சார்க்கர்ஸ் அணி வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அனைத்து துவக்க வீராங்கனையாக தென் ஆப்பிரிக்காவின் லிசெல் லீ விளையாட வந்தார். ஆரம்பத்தில் ஆரம்பித்த இவரது அதிரடி 20வது ஓவர் வரையில் நிற்கவில்லை.

இறுதிவரை களத்தில் நின்ற இவர் 75 பந்துகளை மட்டுமே சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 150 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இவருடைய அணி 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பெர்த் சாக்கர்ஸ் அணி 131 ரன்கள் மட்டும் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

புதிய இரண்டு சாதனைகள்

ஆஸ்திரேலிய பெண்கள் பிக் பேஷ் டி20 தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் மற்றும் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கின்ற இரண்டு மெகா சாதனைகளை லிசெல் லீ படைத்திருக்கிறார். இதற்கு முன்னாள் இந்த இரண்டு சாதனைகளும் கிரேஸ் ஹாரிஸ் இடம் இருந்தது. இதை தற்போது ஒரே போட்டியில் உடைத்திருக்கிறார்.

பிக் பேஷ் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் :

லிசெல் லீ – 150*
கிரேஸ் ஹாரிஸ் – 136*
ஸ்மிருதி மந்தனா – 114*
ஆஷ்லே கார்ட்னர் – 114
அலிசா ஹீலி – 112*

இதையும் படிங்க : இந்திய முதல் டெஸ்ட்.. 13 பேர் கொண்ட ஆஸி அணி அறிவிப்பு.. புதிய ஓபனர்.. அதிரடி மாற்றங்கள்

பிக் பேஷ் தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் :

லிசெல் லீ – 12
கிரேஸ் ஹாரிஸ் – 11
லாரா அகதா – 11
ஆஷ்லே கார்ட்னர் – 10
டியான்ட்ரா டாட்டின் – 9

- Advertisement -