பேட்டிங்கில் கலக்கிய எய்டன் மார்க்ரம் 175
பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே வீரர் 48/5
நெதர்லாந்தை வஞ்சம் தீர்த்த
தென்னாப்பிரிக்கா அணி !

0
285

நெதர்லாந்த அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட தொடராக இது அறிவிக்கப்பட்ட நிலையில் கோவிட் தொற்றின் காரணமாக இந்தத் தொடர் அப்போது ரத்து செய்யப்பட்டு தற்போது இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடராக நடத்தப்பட்டது. .

இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்தை வீழ்த்தி 1-0 தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய பணிந்தது.

- Advertisement -

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் விரைவாக ஆட்டம் இழக்க அந்த அணி நூற்றினார் 25 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்தார் டேவிட் மில்லர். இவர்கள் இருவரும் மிகவும் அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்கா அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியினர். குறிப்பாக மார்க்ரம் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் விளையாடி ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த சதத்தையே மிகப்பெரிய ஸ்கோராகவும் மாற்றினார்.

அவர் 126 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 17 பௌண்டரிகளின் உதவியுடன் 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் இவருக்கு துணையாக ஆடிய டேவிட் மில்லர் 61 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஆறு பவுண்டரிகளும் அடங்கும். இவர்களின் அதிரடியான ஆட்டத்தினால் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 370 ரன்கள் 8 விக்கெட்களை இழந்திருந்தது

இதனைத் தொடர்ந்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 39.1 ஓவரில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. நெதர்லாந்து அணியின் பேட்டிங்கில் மூஸா அஹமத் 61 ரண்களும் அந்த அணியின் கேப்டன் எட் வர்ட்ஸ் 42 ரண்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்ட சிசாந்தா மகாலா 48 ரன்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் கடந்த போட்டியிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகளில் நேரடியாக தகுதி பெறுவதற்கு எட்டாவது இடத்தில் இருக்கிறது. வருகின்ற மே மாதம் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றினால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்று விடும்