“உலக கோப்பையை ஜெயிச்சுட்டு.. நாட்டுக்கு போகாம இந்தியா கூட விளையாடியது ஏன்?” – டிராவிஸ் ஹெட் வெளியிட்ட சுவாரசிய தகவல்!

0
4120
Head

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தற்பொழுது நட்சத்திர பேட்ஸ்மேனாக மிகுந்த முக்கியத்துவம் கொண்ட வீரராக டிராவிஸ் ஹெட் மாறி வருகிறார்.அதிரடி வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருப்பதுதான் சிறப்பான விஷயம்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை ஆரம்பித்து வைத்தார். அதாவது அவர் களம் இறங்கும் எல்லா போட்டியிலும் அதைச் செய்தார். முன்பு மேலும் அவர் எப்படியான ரிஸ்க் கொண்ட ஷாட்களையும் அடித்தார். அதற்காக அவர் அச்சப்பட்டதே இல்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற ஆசஸ் டெஸ்ட் தொடரில் டிராவிஸ் ஹெட் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ச்சியாக அவருக்கு விளையாட வாய்ப்புகள் வந்தது. உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடிய போதிலும், இவருக்கான வாய்ப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்ந்து கொடுத்தது.

மேலும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றதை அடுத்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இவருக்கு நிரந்தர துவக்க வீரராகவும் விளையாடும் வாய்ப்பு தற்போது அமைந்திருக்கிறது. டேவிட் வார்னர் முற்றிலும் ஓய்வு பெறும் பொழுது, இவருடைய முக்கியத்துவம் ஆஸ்திரேலியா அணியில் இன்னும் அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் என, இந்திய அணி சாம்பியன் ஆகும் வாய்ப்பை இரண்டு முறை தனி வீரராகத் தட்டிப் பறித்து இருக்கிறார்.

இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற பின்பும், ஆஸ்திரேலியா திரும்பாமல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்தியாவிற்கு எதிராக இருந்து முடித்திருக்கிறார். பல முன்னணி வீரர்களும் நாடு திரும்பிய பொழுதும் இவர் திரும்ப விரும்பவில்லை.

தற்பொழுது இதற்கான காரணத்தை கூறிய டிராவிஸ் ஹெட் “கையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் போது நான்கரை வாரங்கள் நான் வீட்டில் இருந்தேன். வீட்டில் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியானதுதான், ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நேரம் அதிகம் கிடையாது.

நான் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறுவதற்காக விளிம்பில் இருப்பவன். நான் இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் எனக்கு துவக்க வீரராக வாய்ப்பை தருகிறது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராக ஷீல்ட் கேம் இல்லை ஒன்று இரண்டு டி20 போட்டிகள் விளையாடுவதே எனது திட்டம். குறிப்பாக எனக்கு டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கு டி20 கிரிக்கெட்தான் சிறந்த வழி என உணர்ந்தேன். இதன் காரணமாகவே நான் ஆஸ்திரேலியா உடனே செல்லவில்லை” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -