“சமி வந்த பின்னாடி.. பேட்ஸ்மேன்கள் கண்ணுல கண்ணீர் வருது!” – மேத்யூ ஹைடன் மனம் திறந்த பாராட்டு!

0
2164
Shami

நேற்று உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இந்திய அணியின் தற்போதைய செயல்பாட்டில் இருக்கக்கூடிய பெரிய வித்தியாசமாக இருப்பது இந்திய அணியின் பந்துவீச்சுதான். பொதுவாக இந்திய அணியின் பேட்டிங் எப்பொழுதுமே சராசரியாக நன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த தொடர்பு முழுக்கவே இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பான முறையில் அமைந்திருந்தாலும் கூடவே, முகமது சமி விளையாட வாய்ப்பு பெற்ற கடைசி மூன்று ஆட்டங்களில் இந்திய அணியின் பந்து வீச்சுத் திறன் அசுரத்தனத்தில் இருக்கிறது.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நல்ல துவக்கம் கிடைத்து, அவர்கள் 320 ரன்களை தாண்டுவார்கள் என்கின்ற நிலை இருந்தது. ஆனால் அவர்களால் 280 ரன்களையே தாண்ட முடியவில்லை. இந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் முகமது சமி காட்டிய பந்துவீச்சு திறன் அவ்வளவு அபாரமாக இருந்தது. அவர் அந்த போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி எடுத்த ரன்கள் 229தான். ஆனால் இந்திய அணி அந்த போட்டியில் நூறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சமி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது போல் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய பொழுது, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக தெரிந்தது. நேற்றைய போட்டியில் மீண்டும் முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா லெஜெண்ட் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “முகமது சமி மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற பிறகு, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கண்களில் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.

அவருடைய பந்துவீச்சில் மர்மம் எதுவும் கிடையாது. தன்னுடைய பந்துவீச்சை எளிமையான முறையில் செதுக்கி இருக்கிறார். அவர் ஸ்கிராம்பெல் சீமில் வீசுவது கிடையாது. நேரான சீமில்தான் வீசுகிறார். அவருக்கு நல்ல மணிக்கட்டு இருக்கிறது. இதனால் அவரால் ஸ்டெம்புக்குள் நுழைய முடிகிறது.

அவர் அதைச் செய்ய முடியாவிட்டாலும் கூட, அவரால் பந்தை நன்றாக சேப் செய்து, இரண்டு பக்கத்திலும் நகர்த்த முடியும். இந்த உலகக் கோப்பையில் நாம் பேட்டிங் பற்றி அதிகமாகப் பேசுகிறோம். ஆனால் பந்துவீச்சில் அவர் மிக அற்புதமாக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!