ஆப்கானின் சிறப்பான உலக கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.. தென் ஆப்பிரிக்கா இறுதியில் வெற்றி!

0
711
Afghanistan

இன்று உலகக்கோப்பை தொடரில் தங்களின் கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடின.

தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்க, ஆப்கானிஸ்தான் அணிக்கு நடப்பு உலக கோப்பையில் இதுவே கடைசி போட்டியாக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் மேல் வரிசையில் இருந்து வழக்கம் போல் ரன் வரவில்லை.

ஆப்கானிஸ்தான் அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஓமர்ஸாய் மிகச் சிறப்பாக விளையாடி 97 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். ரஹ்மத் ஷா 26, நூர் அகமது 26, குர்பாஸ் 25 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்டு கோட்சி 41 ரன்களுக்கு நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் 41, டெம்பா பவுமா 23, எய்டன் மார்க்ரம் 25, கிளாசன் 10, டேவிட் மில்லர் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் இறுதிவரை களத்தில் நின்ற வாண்டர் டேசன் அரைசதம் அடித்து 95 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய பெலிக்வாயோ 39 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்.

முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லீக் சுற்றில் ஏழு வெற்றிகளை பெற்று 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரை மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாற்றியதில் பெரிய பங்கு ஆப்கானிஸ்தான் அணிக்குத்தான் இருக்கிறது. மிகச் சிறப்பாக இந்தத் தொடர் முழுவதும் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் நடப்பு உலகக்கோப்பை பயணம், தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது!

- Advertisement -