ஆப்கான் உலக கோப்பை அணி அறிவிப்பு.. கோலியின் பங்காளிக்கு இடம்.. ஆல்ரவுண்டர் அதிரடி நீக்கம்.. எதிர்பாராத டிவிஸ்ட்!

0
5019
Afghanistan

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி, நவம்பர் 19ஆம் தேதி வரையில், இந்தியாவில் முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுமையாக நடைபெற இருக்கிறது!

இந்த உலகக்கோப்பை தொடருக்கு மொத்தம் பத்து அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. லீக் சுற்றில் ஒரு அணி மற்றொரு அணியை எதிர்த்து ஒருமுறை மோதுகிறது. ஒரு அணிக்கு லீக் சுற்றில் ஒன்பது ஆட்டங்கள் கிடைக்கிறது.

- Advertisement -

லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரைஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றன. அதில் வெல்லும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு வருகின்றன. இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடக்க இருக்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு எட்டு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன. அந்த எட்டு அணிகளில் ஒரு அணியாக ஆப்கானிஸ்தான் அணி இருந்தது. இலங்கை மாதிரியான பெரிய கிரிக்கெட் நாடு தகுதி சுற்றில் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் தகுதி சுற்றில் தோற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெறாமல் போனது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு உலக கோப்பை இந்தியாவில் நடக்க இருக்கின்ற காரணத்தினால் மிக அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் அணியில் தரமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் நல்ல துவக்க ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். எனவே ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் யாரையும் வீழ்த்தலாம் என்கின்ற நிலையே இருக்கிறது.

- Advertisement -

தற்சமயம் ஒருநாள் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் அதிரடியாக மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் குல்பதின் நைப் நீக்கப்பட்டு இருக்கிறார். இது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் விராட் கோலி உடனான சர்ச்சை சண்டை வீரர் நவீன் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அணிக்கு இறுதிக் கட்டத்தில் பந்து வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் தேவை என்கின்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் ஆசியக் கோப்பையில் எதிர்பார்த்த அளவுக்கு ஆப்கானிஸ்தான் பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்படவில்லை.

ஒருநாள் உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹாசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத்கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்- உல்-ஹக்