9 ரன் 4 விக்கெட்.. ஐபிஎல் 2024 அறிமுக வீரர் அபாரம்.. அயர்லாந்து டி20 தொடரை வென்ற ஆப்கான்

0
1133

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜர்தான் அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் இரு டி20 போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரை வெல்லப் போகும் மூன்றாவது போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. இதன்படி டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

- Advertisement -

தொடக்க விக்கெட்டுகள் விரைவிலேயே ஆட்டம் இழந்த போது, மூன்றாவது களமிறங்கிய இப்ராஹிம் ஜர்தான் அணியின் சூழ்நிலையினை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். 51 பந்துகள் விளையாடி அவர் ஐந்து பௌண்டரி, மூன்று சிக்சர்கள் என 72 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவரை எந்த அயர்லாந்து அணி பந்து வீச்சாளரும் அவுட் செய்ய முடியவில்லை.

மற்ற வீரர்கள் குறைவாக ரன்களைச் சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி முக்கிய மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் 9 ரன்களிலும், கேப்டன் ஸ்டெர்லிங் நான்கு ரன்களிலும், டக்கர் டக் அவுட் ஆகியும் வெளியேறினார்கள். இதனால் அயர்லாந்து அணியின் சரிவு அங்கேயே ஆரம்பித்தது. இருப்பினும் கேம்பர் சற்று அதிரடியாக விளையாடி 28 ரன்கள் குவித்தார். இதனால் மற்ற வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் அயர்லாந்து அணி 17.2 ஓவர்களிலேயே 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஓமர்ஜாய் நான்கு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வருகிற 2024 ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக விளையாடப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் வரவு குஜராத் அணிக்கு மேலும் நம்பிக்கையை கொடுக்கும். மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல்ஹக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இவர்கள் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இதையும் படிங்க: பிஎஸ்எல் பைனல்.. 6 பந்துக்கு 8 ரன்.. ரிஸ்வான் அணிக்கு எதிராக சதாப் கான் அணி சாம்பியன் ஆனது எப்படி?

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இப்ராகிம் ஜர்தான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ரசீத் கான் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ரசீத் கான் 33 ரன்கள் குவித்தும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.