“ரஷித் கான் தாமதமாக பவுலிங் போட நான் காரணம் இல்லை” – இந்தியா போட்டி குறித்து ஆப்கான் கோச் வருத்தம்

0
3473

13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் ஒன்பதாவது போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றியை பெற்றதோடு புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 272 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். அவர் 131 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 55 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் 57 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியின் போது ரஷீத் கான் தாமதமாக பந்து வீச அழைக்கப்பட்டார் என்ற ஒரு சர்ச்சையும் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போதும் பதினாறாவது ஓவரில் தான் ரஷீத் கான் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் முன்னதாகவே பந்து வீசி இருந்தால் ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டும் வீழ்ச்சி இருப்பார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி ஏதேனும் ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். ஆனால் அந்த அணி ரஷீத் கானை தாமதமாக பந்து வீச வைத்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டது என கிரிக்கெட் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” ரஷித் கான் தாமதமாக பந்து வீச வேண்டும் என்பது என்னுடைய திட்டம் அல்ல. அவர் விரைவாக வந்து வீசி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன். இது முற்றிலுமாக கேப்டனின் முடிவு தான். அவருக்கு ஆட்டத்தின் போது ரசித்தானை தாமதமாக பந்து வீச அழைத்தால் அவரால் போட்டியில் மாற்றங்களை செய்ய முடியும் என நினைத்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசிய அவர்” பழைய பந்தில் வீசும் போது சில நேரம் பந்து திரும்பும் என்பதால் ரஷித் கானை தாமதமாக பந்து வீச அழைத்திருக்கலாம். ஆனால் ரஷித் கான் போன்ற ஒரு வீரர் ஆட்டத்தின் துவக்கத்திலேயே பந்து வீச வேண்டும் . அதுதான் எங்களுக்கு சாதகமான முடிவுகளை தரும்” என தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் ஒன்பது ஓவர்கள் வீசிய ரஷீத் கான் 48 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து உலகக்கோப்பை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக டெல்லியில் வைத்து விளையாட உள்ளது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி லக்னோவில் வைத்து நடைபெறுகிறது.