டி20 பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அவமானம்.. ஆப்கானிடம் தொடரை இழந்தது.. 2வது முறையாக தோல்வி

0
1526

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தொடரை இழந்து சோக சாதனையை படைத்தது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகள் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த தொடரில் முகமது ரிஸ்வான் பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி ஆகியவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு psl தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சதாப்கான் தலைமையின் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 92 ரன்களில் படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியுடன் பாகிஸ்தான அணி களம் இறங்கியது. இனி இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சு அசத்தலாக இருந்தது.

பரூக்கி வீசிய முதல் ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் பாகிஸ்தான் வீரர்கள் சயூம் அயூப், சபீக் ஆகியோர் டக் அவுட் ஆகினர். முகமது ஹாரிஸ் 15 ரன்களிலும் தாயத் தாகிர் 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாம் கான் டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

இதனை அடுத்து பாகிஸ்தான அணியின் அனுபவ வீரர்களான இமாத் வசீம் மற்றும் கேப்டன் சதாப்கான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சதாப்கான் 32 ஆண்டுகள் எடுக்க இமாத் வசிம் சிறப்பாக விளையாடி 57 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதனை அடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் உஸ்மான் கனி ஏழு ரன்கள் வெளியேறினாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குர்பாஸ் மற்றும் இப்ராகிம் சார்ட்ரான் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர் .ஆப்கானிஸ்தான் அணிக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் இந்த ஜோடி பார்த்துக் கொண்டது. குர்பாஸ் 44 ரன்களிலும்  இப்ராகிம் 38 ரன்களிலும் ஆட்டம் இழக்க நஜிபுல்லா மற்றும் நபி ஜோடி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இதன் மூலம் ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது.