எங்கும் தோனி எதிலும் தோனி : இங்கிலாந்து வீரர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்

0
614
Adil Rashid Helicopter Shot

கடந்த 24 மணி நேரமாக தோனியின் பெயர் அடிக்கடி ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் தினசரி தோனியை பற்றி செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் மீது இருக்கும் ஈர்ப்பு ரசிகர்களிடையே இன்றுவரை குறையவில்லை
தோனி கேப்டனாக பல சாதனைகள் செய்திருந்தாலும் பல கோப்பைகளை வென்று இருந்தாலும் தோனி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவருடைய ஹெலிகாப்டர் ஷாட் அவருடைய அந்த ஷாட்டிற்க்கு பல ரசிகர்கள் இன்று வரை மீளாமல் இருக்கிறார்கள்.

தோனியின் ஆரம்பகாலகட்டத்தில் அவருடைய பெயரை நிலைநிறுத்தவும் அவரை பிரபலப்படுத்தவும் இந்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு . இத்தகைய புகழ்பெற்ற ஷாட்டை பல கிரிக்கெட் வீரர்களும் விளையாடி அசத்தியுள்ளார்கள் . சமீபத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து மிரட்டினார். இவரைத் தவிர இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா , விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அவ்வளவு ஏன் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடியுள்ளார்.

- Advertisement -

இது போன்ற முன்னணி வீரர்கள் ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடி தோனியை அவர்களது போட்டிக்குள் கொண்டுவருகிறார்கள் இதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. தி ஹண்டர்ட் கிரிக்கெட் நடத்தும் இங்கிலாந்து தொடரில் சூப்பர் நார்தன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் அப்துல் ரஷீத் நேற்றைய போட்டியின்போது தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து அசத்தியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

தோனி விளையாடினாலும் விளையாடாமல் இருந்தாலும் தினசரி நடக்கும் போட்டிகளில் அவப்போது அவர் பற்றிய செய்தி வந்துக்கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தவணை ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார் அப்போது “ நான் தோனி அல்ல . அவர் அளவுக்கு வேகமாக ஸ்டம்பிங் செய்ய முடியவில்லை” என்று தவானிடம் நகைச்சுவையாக கூறினார். நேற்று இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் இருந்த தோனியின் புகைப்படம் வைரலானது அதேசமயம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமும் வைரல் ஆனது. கடந்த 24 மணி நேரமாக எந்த செய்தி எடுத்தாலும் தோனியை பற்றியதாகவே இருக்கிறது என ரசிகர்கள் உற்ச்சாகமாக தெரிவிக்கிறார்கள்.