இந்திய கிரிக்கெட்

2027 WC பற்றி 2 முறை கேட்ட கில்கிறிஸ்ட்.. ரோகித் சர்மா செய்த காரியம்.. ரசிகர்கள் சோகம் – என்ன நடந்தது?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ரோஹித் சர்மா வென்றார். அப்பொழுது ஆடம் கில்கிறிஸ்ட் இரண்டு முறை 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை விளையாடுவது குறித்து கேட்டதற்கு ரோகித் சர்மா செய்த காரியம் ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து ஆட்டம் இழக்காமல் 129 பந்தில் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரோஹித் சர்மா 121 ரன்கள் குவிக்க விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் சர்மாவின் மாற்றம்

இந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா தனது பேட்டிங் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் பந்துகளை எடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அதிரடியாக விளையாடும் முறைக்கு வந்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷி டிராபி தொடரில் ரோஹித் சர்மாவை துவக்க ஆட்டக்காரராக அப்போதைய கேப்டன் தோனி கொண்டு வந்த பிறகு இந்த பாணியிலான ஆட்டத்தை விளையாடினார். பிறகு தான் கேப்டன் ஆன பிறகு அதிரடி துவக்கத்தை தருகின்ற பாணிக்கு மாறினார். மீண்டும் பழைய முறைக்கே திரும்பி வந்து சிறப்பான முறையில் ரன் குவித்திருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா செய்த காரியம்

இன்றைய போட்டி முடிவுக்கு பிறகும், அடுத்து பரிசளிப்பு நிகழ்வின்போதும் ஆடம் கில்கிறிஸ்ட் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து இரண்டு முறை கேள்வி எழுப்பினார். இரண்டு முறையும் கேள்வியை பொறுமையாக கேட்ட ரோஹித் சர்மா அதற்கான பதிலை தரவே இல்லை. தொடர்ந்து இரண்டு முறையும் அவர் அமைதியாகவே இருந்தார். இது ரசிகர்களை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க : இது முழு பர்பெக்ட் மேட்ச் இல்ல.. ஆனா ரோகித் கோலி செஞ்ச அந்த ஒரு விஷயம் அழகு – கேப்டன் கில் கருத்து

தற்போது 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திட்டத்தின் ரோஹித் சர்மா இல்லாமல் இருக்கலாம் எனவும், அவர் தொடர்ந்து நல்ல முறையில் விளையாடினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும், இல்லையென்றால் அவரை கழட்டி விட இந்தியத் தேர்வுக் குழு முடிவு செய்திருப்பதாக தெரிவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே ரோகித் சர்மா இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Published by
Tags: Rohit sharma

Recent Posts