இது முழு பர்பெக்ட் மேட்ச் இல்ல.. ஆனா ரோகித் கோலி செஞ்ச அந்த ஒரு விஷயம் அழகு – கேப்டன் கில் கருத்து

0
282
Gill

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட பர்பெக்ட்டான ஒரு ஆட்டத்தை விளையாடி இருப்பதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் 46.4 ஓவரில் இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஹர்ஷித் ராணா 4 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ரோஹித் சர்மா விராட் கோலி வேடிக்கை

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 பந்தில் 121 ரன், விராட் கோலி 84 பந்தில் 74 ரன் ஆட்டம் இழக்காமல் எடுத்து இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்.

இதுகுறித்து கேப்டன் சுப்மன் கில் கூறும் பொழுது “நாங்கள் கிட்டத்தட்ட ஒரு பர்ஃபெக்ட் ஆட்டத்தை விளையாடி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பிறகு நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்ததும் ஹர்ஷித் செயல்பட்ட விதமும் எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. மிடில் ஓவர்களில் எங்களுடைய ஸ்பின்னர்கள் மற்றும் பாஸ்ட் பவுலர்கள் வந்து செயல்பட்ட விதம் மிகவும் திருப்தியாக இருந்தது”

- Advertisement -

பல வருடமாக செய்கிறார்கள்

“மிடில் ஓவர்களில் எங்களுடைய ஹர்ஷித் ராணாவை எடுத்துக் கொள்ளும் பொழுது அவர் மிக வேகமாக தொடர்ந்து பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா மாதிரியான ஒரு நாட்டில் நீங்கள் விளையாடும் பொழுது நடுவில் இவ்வளவு வேகமாக பந்து வீசக்கூடிய ஒருவர் உங்களுக்கு கட்டாயம் தேவையாக இருப்பார்”

இதையும் படிங்க : எனக்கும் விராட்டுக்கும் ஒரே உணர்வுதான்.. 15 வருஷங்களா நடந்தத மறக்கலாம்.. நன்றி ஆஸி – ரோகித் சர்மா பேச்சு

“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்வதை பார்ப்பது பெரும் மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக அவர்கள் இருவரும் நின்று போட்டியை முடிப்பதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். என்னுடைய கேப்டன்சியில் இந்த வடிவத்தில் இது முதல் வெற்றி. இது சிறப்பான ஒரு உணர்வு. மேலும் இது எங்களுக்கு தேவையான வெற்றி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -