ஆஸ்திரேலியாவில் ஆட சிறந்த பேட்ஸ்மேன்.. விராட் கோலியா ஜோ ரூட்டா? – கில்கிறிஸ்ட் ஓபன் பதில்

0
27
Gilchrist

ஆஸ்திரேலியாவில் சிறந்த முறையில் பேட்டிங் செய்யக்கூடியது விராட் கோலி அல்லது ஜோ ரூட்டா என்கின்ற கேள்வி ஆடம் கில்கிறிஸ்ட் இடம் முன் வைக்கப்பட்டது. அவர் சில தரவுகளை வைத்து ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் சதங்களாக குவித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி – ஜோ ரூட்

ஒட்டுமொத்தமாக மூன்று வடிவ கிரிக்கெட் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது விராட் கோலிக்கு நிகராக மூன்று வடிவ கிரிக்கெட் எல்லோரும் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் தற்போது உலகக் கிரிக்கெட்டில் கிடையாது. அவர் மட்டுமே தனி ஒரு வீரராக மூன்று வடிவத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது ஜோ ரூட் தனி ஒரு வீரராக மிகச்சிறப்பானவராக கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் மட்டும் அவர் மொத்தம் 17 சர்வதேச டெஸ்ட் சதங்கள் எடுத்திருக்கிறார். இந்த வகையில் அவரிடம் அருகில் கூட யாரும் கிடையாது.

யார் சிறந்தவர்?

இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறந்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் யார் என்று பேசிய ஆடம் கில்கிறிஸ்ட் ” இங்கே ஜோ ரூட்டின் புள்ளி விபரங்கள் மிகவும் விதிவிலக்கானவையாக இருக்கிறது. அதே சமயத்தில் விராட் கோலியின் புள்ளி விவரங்கள் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணைப் பொறுத்த வரையில் எடுத்துக் கொண்டால் இங்கு 50 ரன் சராசரி என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

இதையும் படிங்க : 9.4 ஓவர்.. 320 ஸ்ட்ரைக் ரேட்.. ஹெட் அதிரடியால் ஆஸி உலக சாதனை.. ஸ்காட்லாந்து அணி பரிதாப தோல்வி.. முதல் டி20

இருவரில் ஒருவரை ஆஸ்திரேலிய மண்ணில் யார் சிறப்பானவர் என்று தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் விராட் கோலியை தேர்வு செய்வேன். ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்ததாக எனக்கு நினைவில்லை. அதே சமயத்தில் பெர்த் மைதானத்தில் விராட் கோலி மிகச் சிறப்பான சதம் ஒன்றை அடித்தார். அது வித்தியாசமான கிரேவியாக இருந்தது. ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என இரண்டு வடிவத்திலும் ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டை விட சிறந்தவர் விராட் கோலி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -