9.4 ஓவர்.. 320 ஸ்ட்ரைக் ரேட்.. ஹெட் அதிரடியால் ஆஸி உலக சாதனை.. ஸ்காட்லாந்து அணி பரிதாப தோல்வி.. முதல் டி20

0
321

ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் ஸ்காட்லாந்து அணியை 9.4 ஓவர்களிலேயே ஊதித் தள்ளியது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் இந்த அதிரடி ஆட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல்முறையாக ஸ்காட்லாந்தில் ஆஸ்திரேலியா அணி விளையாடுவதால் இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி எய்டன்பெர்க் மைனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மன்சே 16 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கிராஸ் 27 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் அபாட் மூன்று விக்கெட்டுகளும், ஆட்டம் ஜம்பா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல்லில் அதிரடி காட்டிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மேக்கர்க் தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்குப் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 113 ரன்கள் குவித்தது. டி20 போட்டி வரலாற்றில் பவர் பிளேவில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா படைத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஹெட் 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 320 ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்கள் குவித்தார். மேலும் அணியின் கேப்டன் மார்ஸ் 12 பந்துகளில் ஐந்து பௌண்டரி மற்றும் மூன்று சிக்சர்களுடன் 39 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:6.7 அடி உயர வீரர் அறிமுகம்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இலங்கை அணிக்கு 3வது டெஸ்ட்டில் புது சவால்

இதனால் ஆஸ்திரேலியா அணி 9.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள ஸ்காட்லாந்து அணி அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

- Advertisement -