அஷ்வினை ஆட வைக்க இது தான் ஒரே வழி – நடிகர் சித்தார்த் வழங்கிய நூதன யோசனை

0
3659
Actor Siddharth and Ashwin

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகித்தாலும், தற்போது நடந்து வரும் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான நிலையில் இந்திய அணி ஆடி வருகிறது. முதல் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட அணி தோற்று விட்டது என்ற நிலைக்கு இந்திய அணி ஆளாகி இருக்கிறது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் இந்தமுறை முதல் இன்னிங்சில் ஏமாற்றினர். அனுபவமிக்க மிடில் ஆடர் வீரர்களான ரஹானே கோலி புஜாரா என மூவரும் மறுபடியும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பெவிலியன் திரும்பினர். விராட் கோலியின் மோசமான பேட்டிங்கை விட அதிக விமர்சனத்துக்கு உள்ளாவது தற்போது வரை அஷ்வினை ஆட வைக்காமல் வெளியே அமரவைத்து இருப்பதுதான்.

- Advertisement -

இந்திய அணியின் சூழல் ஜாம்பவானான அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீச மாட்டார் என்ற விமர்சனத்தை உடைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே அதிகமான வேரியேஷன்களுடன் எவ்வளவு பெரிய பேட்டிங் விருதாக இருந்தாலும் அவர்களை அவுட்டாகும் திறமை படைத்தவராக விளங்கி வருகிறார் அஷ்வின். இப்படி இருந்தும் தொடர்ந்து அஸ்வின் புறக்கணிக்கப்படுவது ரசிகர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ravichandran Ashwin Test

அஸ்வினுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் அதிக ஓவர்கள் பந்து வீசுவது இல்லை இந்த நாள் மீண்டும் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது வலுவாக எழுந்துள்ளது அதிலும் சினிமா நடிகரான சித்தார்த் வினோதமாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அஸ்வின் கேப்டனாக செயல்பட்டால் மட்டும்தான் அணிக்குள் வர முடியும் போல என்ற தொனியில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

“நாம் அஸ்வினை ஒரு ஆட்டத்திற்கு கேப்டனாக ஆக்குவோமா? இப்படி செய்தால் மட்டும் தான் அஸ்வின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போல” என்று கேப்டன் விராட் கோலியை சாடும் வண்ணமாக இந்த ட்வீட்டை இவர் வெளியிட்டுள்ளார். இதனை எதிர்த்து விராத் கோடி ரசிகர்கள் தற்போது பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

- Advertisement -