கிரிக்கெட்டின் கிறிஸ்டோபர் நோலன் அஸ்வின்! பல தெரியாத விசயங்களை புட்டு வைத்த அபினவ் முகுந்த்

0
524

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை எப்போதும் ரசிகர்கள் விஞ்ஞானி என்றுதான் கூறுவார்கள். காரணம் போட்டியை பல பரிணாமத்தில் அதற்கு ஏற்ப திட்டங்களை வகுப்பதில் வல்லவர். இந்த நிலையில் அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இது அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்த ஐந்தாவது அரை சதம் ஆகும். இந்த நிலையில் அஸ்வின் குறித்து பேசிய தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த், அஸ்வினை கிரிக்கெட்டின் கிறிஸ்டோபர் நோலன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் அஸ்வின் 17 வயதிலிருந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக தான் என்னுடன் விளையாடினார்.

- Advertisement -

அப்போது,அஸ்வின் பந்து பேட்டிற்கு வந்தால் லாவகமாக ரன் அடித்து அசத்துவார். எனினும் பந்து கொஞ்சம் ஸ்விங்கானால் ரன் சேர்க்க தடுமாறுவார். அப்போது அஸ்வினுக்கு ஏற்ற இடம் நடுவரிசை தான் என்று நான் நினைத்தேன். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதற்கு ஏற்றார் போல ஒரு இடம் அவருக்கு பேட்டிங் செய்ய கிடைத்து விட்டது.

எப்போதுமே கிரிக்கெட் குறித்து யோசித்துக் கொண்டே இருப்பார். ஒரு போட்டிக்கு விளையாடுவதற்கு முன்பு தேர்வுக்கு மாணவன் தயாராவது போல் இவரும் செயல்படுவார். இந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்று ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார்.

அந்த பேட்ஸ்மேன் குறித்து ஏதேனும் செய்தி வந்ததை சேகரித்து அதன் மூலம் தன்னுடைய திட்டத்தை வகுப்பார். இப்படி அஸ்வின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தன்னை தயார்படுத்திக் கொண்டதால் தான் இன்று சாதனையாளராக இருக்கிறார் என நினைக்கிறேன்.மேலும் நானும் அஸ்வினும் இரண்டு ஆண்டு ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம்.

- Advertisement -

அப்போது அஸ்வின் இரவு தாமதமாக தான் தூங்குவார். எப்போதுமே ரூம்மில் ஏதேனும் சினிமா பார்த்துக் கொண்டே இருப்பார். சீக்கிரமாக நான் தூங்க சென்று விடுவேன். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். ஆடுகளம் ஏன் இப்படி செயல்படுகிறது.

கள பராமரிப்பாளர்கள் என்ன செய்தார்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்.உடனே நான் நீ அதே மைதானத்தில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறாய். எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் போய் தூங்கு என்று கூறுவேன் என்று அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.