கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

4வது தொடர் சதம்.. அபிமன்யு ஈஸ்வரன் அபார ஃபார்ம்.. ருதுராஜ் இடம் பறிபோகிறதா.. கம்பீர் என்ன செய்வார்?

நடப்பது உள்நாட்டு கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக பெங்கால் அணிக்கு முன்னாள் இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் அபார சதம் அடித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டு ரஞ்சி டிராபி முதல் சுற்றுப் போட்டியில் உத்தர பிரதேச அணியும் பெங்கால் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 311 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சுதீப் சட்டர்ஜி116 ரன்கள் எடுத்தார். உத்திரபிரதேச தரப்பில் பந்துவீச்சில் யாஸ் தயால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

துரதிஷ்டவசமாக முன்னிலையை தவறவிட்ட உத்தர பிரதேஷ்

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய உத்தர பிரதேஷ் அணி 292 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக முதல் இன்னிங்ஸ் முன்னிலையை பெற தவறியது. அந்த அணியின் கேப்டன் ஆரியன் ஜுரல் 92 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அஹமத் தல 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டம் இழக்காமல் 172 பந்துகளில் 12 பவுண்டரிகள் உடன் 127 ரன்கள் எடுத்தார். பெங்கால் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. உத்தரப்பிரதேச அணிக்கு நான்காவது மற்றும் கடைசி நாள் ஆன இன்று தற்போது 274 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கம்பீர் திட்டத்தை மாற்றுவாரா?

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு மூன்றாவது துவக்கட்டக்காரர் இடத்திற்கு பயிற்சியாளர் கம்பீர் ருதுராஜை விரும்புகிறார் என்கின்ற செய்திகள் வந்தது. இதன் காரணமாகவே ருதுராஜை பங்களாதேஷ் டி20 தொடரில் தேர்வு செய்யாமல் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் 94 ரன்.. உனட்கட் புஜாரா அணியை சுருட்டி.. தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி. மாஸ் காட்டிய சிங்.. ரஞ்சி டிராபி 2024

இந்த நிலையில் ருத்ராஜ் துலீப் டிராபி ஆரம்பித்து, இரானி கோப்பையில் தொடர்ந்து தற்பொழுது ரஞ்சி டிராபி வரையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதே சமயத்தில் அபிமன்யு ஈஸ்வரன் துலீப் டிராபியின் கடைசி இரண்டு போட்டிகள், அடுத்து இரானி கோப்பை, தற்பொழுது ரஞ்சி டிராபியின் முதல் போட்டி என தொடர்ந்து நான்கு உள்நாட்டு சதங்கள் நடித்திருக்கிறார். எனவே ருதுராஜ் இடத்தை கம்பீர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தருவாரா? என்கின்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts