இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன்.. முதல் முறையாக மவுனம் கலைத்து பேச்சு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து  அபிமன்யூ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 2013 இல் உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமான ஈஸ்வரன், இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. ஈஸ்வரன், சில சமயங்களில் இது மனதை புண்படுத்துவதாக இருந்தாலும், தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தன்னை எப்போதும் ஆதரித்து, எதிர்காலத்திற்காக உற்சாகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர், “ஆமாம், சில சமயங்களில் இது வலிக்கிறது. நீங்கள் முழு முயற்சியையும் செய்கிறீர்கள்.கடினமாக பயிற்சி செய்கிறீர்கள். மையத்தில் இருந்து ஆடி, வெற்றிகளுக்கு பங்களிக்க வேண்டும் என்பதே கனவு. ஆனால், எனக்கு ஒரு வலுவான ஆதரவு அமைப்பு இருப்பது பாக்கியம்.என் குடும்பம், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்.”

எதிர்னோக்கி இருக்கிறேன்:

“அவர்கள் என்னை உறுதியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறார்கள்.இப்போது நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். ரஞ்சி போட்டிகளை எதிர்நோக்கி இருக்கிறேன்,” என்று ஈஸ்வரன் கூறினார்.பெங்கால் அணியின் அனுபவ வீரரான ஈஸ்வரன், தான் தொடர்ந்து கற்றுக்கொள்பவர் என்றும், ஒவ்வொரு பின்னடைவுக்குப் பிறகும் கடினமாக உழைப்பதில் நம்பிக்கை கொண்டவர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “நான் என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். கடினமாக உழைப்பது, சிறப்பாக பயிற்சி செய்வது. ஆமாம், சில சமயங்களில் மோசமாக உணர்கிறேன், ஆனால் அது இயல்பு. அதற்கு ஒரே தீர்வு, தொடர்ந்து முன்னேறுவது. இந்த பருவத்தில் நான் இரண்டு புதிய ஷாட்களை பயிற்சி செய்கிறேன். எவை என்பதை வெளிப்படுத்த மாட்டேன்.”

- Advertisement -

கடுமையாக உழைக்கிறேன்:

“ஆனால் அவை நன்றாக வெளிப்படும் என்று நம்புகிறேன். இந்தியாவுக்காக ஆடுவது என்பது மிகப்பெரிய உந்துதல். பெங்காலுக்காக ஆடும்போதும், எனக்கு மிகுந்த பெருமை உணர்வு ஏற்படுகிறது. அதுவே என்னை உயர்த்துகிறது,” என்று ஈஸ்வரன் கூறினார். ஈஸ்வரன் இதுவரை 105 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார்.

இதையும் படிங்க: வெறும் 97 ரன்.. இந்திய அணிக்கு பயம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. மேஜிக் நடக்குமா? கலக்கிய ஜோடி

180 இன்னிங்ஸ்களில் 48.50 சராசரியுடன் 7954 ரன்கள் குவித்துள்ளார். 30 வயதான இவர், பல இந்தியா ஏ போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருப்பினும், இந்திய அணிக்காக அவர் இன்னும் அறிமுகமாகவில்லை. ஈஸ்வரன் சமீபத்தில் 2025 இல் நடந்த இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -
Published by

Recent Posts