ஷாஹின் அப்ரிடிக்கு நிகராக பும்ராவால் வரமுடியாது என பேசியுள்ளார் அப்துல் ரசாக்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பாகிஸ்தான் அணியின் வீரர்களை இந்திய வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவதும் விவாதிப்பதும் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசி வந்தனர்.
சமகாலத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரும் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சில் பும்ரா மற்றும் ஷாஹின் அப்ரிடி இருவரையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பும்ரா மற்றும் ஷாஹின் அப்ரிடி விவாதத்திற்கு தனது பதிலை கொடுத்திருக்கிறார் பாகிஸ்தான் தேர்வுக்குழு உருப்பஜனர் மற்றும் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். அவர் கூறியதாவது:
“ஷாஹின் அப்ரிடி பந்துவீச்சிற்கு நிகராக பும்ராவால் ஒருபோதும் வர முடியாது. இருவரில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி. இவரது டெக்னிக் மற்றும் துல்லியம் பும்ராவிடம் இல்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் பலமுறை திணறியுள்ளனர்.” என்றார்.
அப்துல் ரசாக் பும்ராவை பற்றி பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பும்ரா பவுலிங் பற்றி தரக்குறைவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது, “பும்ராவின் பந்துவீச்சு எனக்கு பேபி பவுலிங் போன்றது. நான் லெஜெண்ட் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்றோரின் பந்துவீச்சை பார்த்திருக்கிறேன். ஆகையால் பும்ராவின் பந்துவீச்சை எளிதாக அடித்து விளாசி ஆதிக்கம் செலுத்தி விடுவேன்.” என்று அப்போது பேசினார்.