“இங்கிலாந்தின் பேஸ்பாலும், தோனியின் கேப்டன்ஷியும் ஒன்னு தான்” – ஏபி டிவில்லியர்ஸ் சொன்ன காரணம்

0
8060

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம் ஆட்டத்தின் முதல் நாளில் 393 ரன்கள் எடுத்து கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில் அவர்கள் திடீரென்று டிக்ளர் செய்தனர். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து கடைசி இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்தாலும் வெற்றி என்ற இடத்தில் களமிறங்கி ஆஸ்திரேலிய அணி கைவசம் இரண்டு விக்கெட் இருக்க நான்கு ஓவர்கள் மிச்சம் இருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து இப்படி அதிரடியாக முடிவுகளை எடுத்து விளையாட வேண்டும் முறைக்கு பேஷ்பால் என்று ரசிகர்களால் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் பர்மிங்கம் ஆடுகளம் இந்த டெஸ்ட் போட்டியில் முக்கிய பங்காற்றும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இங்கிலாந்து எடுக்கும் அதிரடி முடிவுகளுக்கான காரணம் தற்போது தெரிய வருகிறது.இதனை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். சிலர் பேஷ்பால் என்று கூறி வருகிறார்கள். ஆனால் நான் இதை ஸ்மார்ட் கிரிக்கெட் என்று கூறுவேன். சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பான கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் வெற்றி பெறும் நிலைக்கு வரும் அணிகளே சிறந்தது.

அனைவரும் இப்படி செயல்பட மாட்டார்கள். தைரியமாக டிக்ளர் செய்வதாகட்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஷார்ட் ஆடுவது ஆகட்டும் என அவர்கள் எப்போதுமே வெற்றியை நோக்கி தான் முடிவெடுப்பார்கள். ஆனால் ஒரு அணியாக இப்படி செயல்படுவது மிகவும் கடினம்.

- Advertisement -

அணியில் இருக்கும் ஒட்டுமொத்த வீரர்களும் ஈகோவை தூக்கி போட்டு ஒரே உணர்வுடன் விளையாட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்படி செயல்படுவதன் மூலம் தான் நீங்கள் உலகில் சிறந்த அணி என்று பெயர் எடுப்பீர்கள். இப்படித்தான் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறார்கள்.

இதேபோன்று ஒரு யுத்தியை தான் ஐபிஎல் தொடரில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் செயல்பட்டது. இப்படி செயல்படும்போது ஆட்டம் சுவாரஸ்யம் மிகுந்ததாக மாறும் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

உலகின் சிறந்த அணிகள் இப்படித்தான் விளையாடும் என்று குறிப்பிட்டுள்ள டிவில்லியர்ஸ், தோனியின் சிஎஸ்கேவையும் இங்கிலாந்தின் பேஸ் பால் அணியுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.