உலகக் கிரிக்கெட்டில் அடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பெரிய தொடராக அமைகிறது. இதில் விராட் கோலி ஒரு முக்கிய மாற்றத்தை அணிக்காக செய்ய வேண்டும் என ஏபி.டிவில்லியர்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரண்டு இடங்களில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரரான விராட் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு அவருடைய விருப்பமான வடிவத்தில் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ஸ்வாலை வைத்து வகுக்கப்படும் வியூகம்
இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கும் ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜெய்ஸ்வால் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படலாம் என்கின்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க, கில் மற்றும் விராட் கோலி மூன்று மற்றும் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் இந்திய அணியின் துவக்கம் மற்றும் மிடில் ஆர்டர் என இரண்டுமே ஒரே நேரத்தில் பலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி அணிக்காக இதை செய்யணும்
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் லெஜெண்ட் முன்னாள் வீரர் ஏபிடிவில்லியர்ஸ் கூறும் பொழுது “இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நான்காவது இடத்தில் யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள் என்பது குறித்து நாம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அந்த இடத்திற்கு இன்னும் சரியான வீரர் அமையவில்லை. விராட் கோலி அந்த இடத்திற்கு வருவார் என சில வதந்திகளை நான் கேள்விப்பட்டேன். ஆனால் அந்தச் செய்திகளுக்கு நான் ஆதரவாளனாக இருப்பேன். விராட் கோலி நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்”
இதையும் படிங்க : 2 முக்கிய காரணத்துக்காக.. விராட் ரோஹித் இத செஞ்சே ஆகணும் நான் பாக்கணும் – ரவி சாஸ்திரி கருத்து
“இதனால் அவர் இன்னிங்சை ஒன்றாக இணைக்க முடியும். மிடில் ஆர்டரில் அவரால் எந்த இடத்திலும் விளையாட முடியும். அவர் இதை செய்ய விரும்புகிறாரா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அவருக்கு எல்லா ரன்களும் அங்கிருந்து தான் வந்திருக்கிறது. ஆனால் நாளின் முடிவில் அணிக்கு ஏதாவது தேவை என்றால் நீங்கள் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்க நீங்கள் கையை உயர்த்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






