இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுவதை தான் பார்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி இரண்டு முக்கிய காரணங்களை முன் வைத்து கூறி இருக்கிறார்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டின் முதுகெலும்பான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மோசமான முறையில் விளையாடினார்கள். இந்திய அணி தோல்வி அடைவதற்கு இவர்களுடைய மோசமான பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாக அமைந்தது.
கம்பீர் வெளிப்படை அறிவிப்பு
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய தேசிய அணி வீரர்கள் விளையாடுவது அவசியம் என வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்த விஷயத்தை தான் எப்போதும் விரும்புவதாகவும் இதில் எல்லோரையும் சமமாகவே தான் பார்ப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு தேசிய அணிக்கு விளையாடுவது போக இடைவேளை இருந்தால் அவர்கள் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து விளையாட வேண்டும். அங்கு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை நான் பார்க்க வேண்டும்”
இரண்டு முக்கிய காரணங்கள்
“மேலும் நீங்கள் நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இரண்டு முக்கிய காரணங்களுக்காக விளையாட வேண்டும். முதல் காரணம் நீங்கள் தற்போதைய கிரிக்கெட் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள். இரண்டாவது காரணம் நீங்கள் இந்திய இளம் வீரர்களுடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறீர்கள்”
இதையும் படிங்க : அஸ்வின் தன்னை நம்பர் 1 ஸ்பின்னர்னு நினைக்கிறார்.. அவர் ஓய்வு வேடிக்கையானது – பிராட் ஹாடின் பேச்சு
“மேலும் நீங்கள் வேகப்பந்து வீச்சில் விளையாடுவதை விட பின்னில் விளையாட வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் அதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். தரமான சூழல் பந்துவீச்சாளர்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு இங்கு அதில் நல்ல சவால் கிடைக்கும். நீங்கள் அடுத்து இந்திய அணிக்கு திரும்பும் பொழுது அது உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






