விராட் கோலி விருப்பம் என்னனு எனக்கு தெரியும்.. ஆனா ஆர்சிபி இதில் பக்குவமா நடந்துக்கனும் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

0
80
Virat

தற்போது விராட் கோலியின் விருப்பம் என்னவாக இருக்கும் எனவும், இந்த ஐபிஎல் தொடரில் இன்னும் ஆர்சிபி அணிக்கும் ஒரு போட்டியை எஞ்சி இருக்கும் நிலையில் ஒரு விஷயத்தில் பக்குவமாக இருக்க வேண்டும் என்றும் ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மழை குறுக்கிட்டு தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போட்டியில் வெல்லக்கூடிய அணி இறுதிப்போட்டியில் நாளை மறுநாள் ஆர்சிபி அணிக்கு எதிராக இதே மைதானத்தில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபி வரலாற்றில் முதல் முறை

ஆர்சிபி அணி இதுவரையில் 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆனால் அப்பொழுது இருந்ததை விட தற்பொழுது ஆர்சிபி அணியின் பௌலிங் யூனிட் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக அமைந்திருப்பது முதல்முறையாக இருக்கிறது. எனவே இந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆர்சிபி அணி இதுவரையில் 14 போட்டிகளை முழுமையாக விளையாடியிருக்கிறது. இந்த 14 போட்டிகளிலும் 9 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார்கள். இந்த வகையில் ஒவ்வொரு வீரரும் அணியும் வெற்றிக்கு பங்களிப்பு செய்கிறார்கள். இதுவும் ஆர்சிபி அணிக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது.

- Advertisement -

பக்குவமாக இருக்க வேண்டும்

இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் பேசும் பொழுது “விராட் கோலி மற்ற கோப்பைகளை வென்று இருந்தாலும் கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புவார் என்பது எனக்கு தெரியும். மேலும் இதற்கு அவர் தகுதியானவரும் கூட. இப்பொழுது அவர் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது நிறைவான ஒன்றாக அமையும். மேலும் ஆர்சிபி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் டெஸ்ட் டீமுக்கு வர நாங்கதான் உதவ முடியும்.. அவர் எங்ககிட்ட வரணும் – இங்கி மான்டி பனேசர் கருத்து

“எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு மும்பை அணியை விட பஞ்சாப் அணியை எதிர்கொள்வதுதான் சாதகமான விஷயமாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இந்த விஷயத்தில் நாம் கொஞ்சம் பக்குவமாகவும் யோசிக்க வேண்டும். ஏனென்றால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வரும் என்பது நம்முடைய கையில் இல்லை. அதே சமயத்தில் மும்பையை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வதை விட வேறு பெரிய விஷயம் இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -