தற்போது சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கும் இளம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவதற்கு ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மான்டி பனேசர் கூடியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யவில்லை.
ஸ்ரேயாசுக்கு இது இல்லை
இந்திய உள்நாட்டு சிவப்பு பந்து மற்றும் வெள்ளைப்பந்து தொடர்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டன் ஆகவும் தொடர்களை வென்றிருக்கிறார். மேலும் தற்பொழுது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு வந்தது இல்லாமல், பேட்ஸ்மேன் ஆகவும் 500 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மான்டி பனேசர் கூறும் பொழுது ” ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து ஸ்விங் கண்டிஷனில் விளையாடுவதற்கான பேட்டிங் தொழில்நுட்பம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் பந்தை மிகவும் கடினமாக விளையாடக் கூடியவராக இருக்கிறார். ஆனால் இங்கு இங்கிலாந்தில் பந்தை மிகவும் மென்மையான கைகளால் வர அனுமதித்து விளையாட வேண்டும்”
திரும்பி வர இதை செய்யணும்
“எனவே அவருடைய நுட்பத்தை பொறுத்தவரையில் இங்கிலாந்து கண்டிஷனுக்கு ஏற்றதாக இருக்காது. இங்கிலாந்து கண்டிஷனுக்கு யார் சிறப்பாக விளையாடுவார்களோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரையில் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு வருவதற்கு, எங்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து கவுண்டி கிரிக்கெட் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : விராட் கிடையாது.. என் கண்களைத் திறந்தது இந்த ஆர்சிபி பையன்தான்.. வேற லெவல் கேரக்டர் – தினேஷ் கார்த்திக் பாராட்டு
“டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் தீவிரமாக இருந்தால், ஒரு கவுண்டி அணியை கண்டுபிடித்து அதில் இணைந்து ஒரு சீசன் முழுமையாக விளையாட வேண்டும். அப்படி விளையாடி ஸ்விங் கண்டிஷனுக்கு எதிராக தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை இந்திய தேர்வுக் குழுவிடம் அவர் நிரூபிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






