“சிஎஸ்கே கான்வே விஷயத்தில் தப்பு பண்ணிடாதிங்க.. நாக் அவுட்ல மாட்டிக்குவிங்க” – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து

0
246
Abd

17 வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்குகிறது. தேர்தல் நடக்க இருக்கின்ற காரணத்தினால் இப்போதைக்கு முதல் அட்டவணை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த பிறகு முழு ஐபிஎல் அட்டவணையும் வெளியிடப்படும்.

இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் எதிரெதிர் அணிகளில் இருந்து மோதிக் கொள்வது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகம் அடைய வைத்திருக்கிறது.

அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் கான்வே காயம் காரணமாக இப்போது இருந்து எட்டு வாரங்கள் கிடைக்க மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்திய சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வெளிநாட்டு வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த ஐபிஎல் தொடரில் கூட யாருடைய கவனத்தையும் பெரிதாக தவறாமல் 600க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சிஎஸ்கே வெற்றிக்கு சத்தம் இல்லாமல் காரணமாக இருந்தார்.

- Advertisement -

கான்வே குறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “அவர் எட்டு வாரங்கள் கழித்து கிடைப்பார் என்றால், ஐபிஎல் தொடரில் நாக் சுற்றுக்குதான் கிடைப்பார். சமீபத்தில் கிரிக்கெட் ஏதும் விளையாடாமல் வருகின்ற காரணத்தினால் அவரிடம் ஃபார்ம் இருக்காது. இது நிச்சயம் நாக் அவுட் சுற்றில் சிஎஸ்கே அணிக்கு நல்லதாக இருக்காது.

சிஎஸ்கே அணிக்கு வெளிப்படையாக அந்த அணியில் மிகவும் அவசியமான ஒரு வீரர் அவர். அவர் தற்போது கிடைக்காமல் இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகவே அமைகிறது.

இதையும் படிங்க : “ஊருதான் இங்கிலாந்து மாதிரி.. பிட்ச் நினைச்ச மாதிரி இல்ல.. என்ன நடக்குமோ” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

ரிஷப் பண்ட் திரும்பி வருவது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், எல்லா கிரிக்கெட் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனென்றால் அவர் மிகவும் சிறந்தவர். அவர் வெளியேறி விளையாடும் பொழுது பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.