முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி எந்த அழுத்தமும் கொடுக்காமல் விராட் கோலி சதம் அடிக்க விட்டது தமக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என ஆஸ்திரேலிய லெஜெண்ட் ஆலன் பார்டர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 12 பந்தில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆட்டம் இழந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வந்து அதிரடியாக 143 பந்தில் ஆட்டம் இழக்காமல் தன்னுடைய 30வது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் அவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் ஏழாவது டெஸ்ட் சதமாக அமைந்தது. அந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்தியராகவும், இரண்டாவது வெளிநாட்டு வீரராகவும் மாறினார்.
விராட் கோலி பற்றிய எதிர்பார்ப்பு மற்றும் எச்சரிக்கை
இந்திய தரப்புக்கு ஆதரவாக பேசியவர்கள் அனைவருமே தொடரின் ஆரம்பத்திலேயே விராட் கோலி சில ரன்கள் எடுத்து பார்முக்கு வருவது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், அப்படி அவர் தொடரின் ஆரம்பத்தில் ரன்கள் எடுத்து விட்டால் அந்த தொடரை அவரே பார்த்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்கள்.
அதே சமயத்தில் தரப்புக்கு ஆதரவாக பேசியவர்கள் விராட் கோலியை தொடரின் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்கப்பட்டால் ஆஸ்திரேலியா அணி தொடரை வெல்வது மிகவும் சிரமம் ஆகிவிடும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்கள். விராட் கோலி ஒரு தொடரின் ஆரம்பத்தில் ரன்கள் எடுப்பது எவ்வளவு பெரிய முக்கியம் என்பதை இந்த கருத்துகள் எடுத்துக் காட்டின.
ஆலன் பார்டர் ஏமாற்றம்
இதுகுறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் ஆலன் பார்டர் தன்னுடைய ஏமாற்றத்தை தெரிவிக்கும் பொழுது ” எங்கள் ஆஸ்திரேலியா அணி அதிக எதிர்ப்பு எதையும் காட்டாமல் விராட் கோலியை சதம் அடிக்கப்பட்டதை பார்க்க எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எஞ்சிய தொடரில் விராட் கோலி முழு நம்பிக்கையுடன் இருப்பதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே” கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கேஎல் ராகுலுக்கு அட்லீஸ்ட் இந்த இடத்தை கொடுங்க.. கில்லுக்கு ஸ்பெஷல் பிளான் சொல்றேன் – புஜாரா பேட்டி
இதுகுறித்து ஹைடன் கூறும் பொழுது “விராட் கோலிக்கு எதிராக எங்கள் அணி ஆரம்பத்தில் சில தந்திரங்களை தவற விட்டார்கள். நாதன் லயன் மிட்-ஆன்-பேக், ஆப் சைட் கேட்சிங் மற்றும் மிட் விக்கெட் பகுதியில் பீல்டிங்கை வைத்திருந்தார். இதனால் விராட் கோலி ஈசியாக விளையாட முடியும் என்று நினைத்தேன், அதுவே நடந்தது. மேலும் இரண்டு ஸ்லிப் மட்டுமே வைத்து பாயிண்டிலும் பீல்டரை வைக்கவில்லை. விராட் கோலியை வெளிப்படையாகவே அவுட் சைட் எட்ஜ் எடுக்க ஆதரித்தது” என்று கூறியிருக்கிறார்.