“எத்தனை பேரை பார்த்திருக்கேன்.. இந்தியாவுல இத செய்ய தெரியனும்” – பும்ரா மாஸ் ஸ்பீச்

0
344
Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமாக கிரிக்கெட் வல்லுனர்களால் கூறப்படுகிறது.

இப்படியான ஆடுகளத்தில் ஜெய்ஸ்வால் தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் 34 ரன்கள் தாண்டி எடுக்காத காரணத்தினால், இந்திய அணியால் 396 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட போட்டியின் ஆடுகளத்திற்கு இந்த ரன்கள் போதாது என்றும், இங்கிலாந்து பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மிகவும் அதிரடியான முறையில் விளையாடும், மேலும் இந்தியா அடித்துள்ள ரன்னை அவர்கள் ஒரே நாளில் அடிப்பார்கள் என்று மேலும் கிரிக்கெட் வல்லுனர்களால் கூறப்பட்டது.

இப்படியான நிலையில்தான் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு 55 ஓவர்களில் சுருண்டு இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் மிடில் வரிசையை மொத்தமாக உடைத்து தள்ளிய பும்ரா, கீழ் பேட்டிங் வரிசையிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி, மொத்தமாக 15.5 ஓவர்களில் 5 மெய்டன்கள், 45 ரன்கள் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

பந்துவீச்சுக்கு பெரிய சாதகம் இல்லாத இந்த ஆடுகளத்தில், ரிவர்ஸ் பிங்க் பந்துவீச்சு கலையைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்து, இந்திய அணியை இந்த போட்டியில் மிகவும் மேலே வைத்திருக்கிறார்.

இன்றைய நாள் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய பும்ரா கூறுகையில் “நீங்கள் விக்கெட்டுகளை பெறும்போது மகிழ்ச்சி அடைகிறீர்கள். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நாட்டில் பிறந்து விளையாடும் உங்களுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். மேலும் இந்தியாவில் விளையாட இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.

நான் ரிவர்ஸ் ஸ்விங் வீசும் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை பார்த்தோம், அதற்கான பவுலிங் செட்டப்புகளை பார்த்து வளர்ந்தவன். இப்போது நான் அதைச் செய்ய முடிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீசும் பொழுது, ஒவ்வொரு முறையும் மக்கள் நீங்கள் மாயாஜாலமான பந்தை வீசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி செய்ய முடியாது. மேலும் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என மட்டும் மாற்றி மாற்றி வீச முடியாது. நீங்கள் பொறுமையாக புத்திசாலித்தனமாக உங்களது டெலிவரிகளை வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : 139 ரன்.. 9 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய அணி.. போட்டியை மாற்றிய பும்ரா

உதாரணமாக போப் விக்கெட்டை கைப்பற்றியதும், அவர்கள் இன் ஸ்விங் டெலிவரிகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்று நான் உணர்ந்தேன். அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். நான் நம்பர்களை பார்ப்பதில்லை. அது என் மேல் அழுத்தத்தை உண்டாக்கக் கூடியது. விளையாடி அணியின் வெற்றிக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -