நடப்பு ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் மே 18ஆம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஒரு காலிறுதிப் போட்டி போல மாறியிருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆர்சிபி அணி எப்படியான பிளேயிங் லெவனை களம் இறக்கலாம் என்று பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும். ஆனால் ஆர்சிபி 11 பந்துகள் மீதம் வைத்தோ அல்லது 18 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியின் ரன் ரேட்டை தாண்டி 14 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் எல்லா வீரர்களையும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டு இருக்கிறது. இது ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது.
ஆர்சிபி அணியில் இருந்து அதிரடி இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் நாடு திரும்பிவிட்டார். அவர் மூன்றாம் இடத்தில் வந்து அதிரடியாக விளையாடுவது ஆர்சிபி அணிக்கு பெரிய உந்து சக்தியாகவும் மாற்றத்தை கொடுப்பதாகவும் இருந்தது. அவர் சிறப்பான முறையில் விளையாடி குஜராத்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய இடத்தில் ஆர்சிபி பேட்டிங் ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல்லை களம் இறக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. அதே சமயத்தில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் பிளேயிங் லெவனை மாற்றமும் வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது. இதன் அடிப்படையில் ஒரே ஒரு மாற்றத்துடன் மட்டுமே வில் ஜேக்ஸ் இடத்தில் கிளன் மேக்ஸ்வெல்லை வைத்து ஆர்சிபி சிஎஸ்கே அணியை சந்திக்கும். அதே சமயத்தில் இந்த அணியும் வலிமையானதாகவே இருக்கும்.
இதையும் படிங்க : ஹர்திக் பாய் இல்லாதது எப்படி பிரச்சினை? ஒரு வீரரால் ஒரு ஐபிஎல் சீசனை மாற்ற முடியாது – சுப்மன் கில் பேட்டி
சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
பாப் டு பிளேசிஸ், விராட் கோலி, கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார், கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, லாக்கி பெர்குஷன், முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால். மேலும் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங்கில் மகிபால் லோம்ரர் வருவார். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்து, கம்மி விக்கெட்டுகளை மட்டுமே இழந்தால், ஒரு இந்திய பந்துவீச்சாளரையும் இம்பேக்ட் பிளேயராக கொண்டுவர முடியும்.