“உங்க பெருமை இந்தியா கிட்ட செல்லாது.. ஜெயிக்க இத செய்யுங்க” – ஆரோன் பின்ச் இங்கிலாந்துக்கு ஐடியா

0
466
Finch

இங்கிலாந்தின் தற்போதைய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் டெஸ்ட் போட்டியை 28 ரன் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து ஆச்சரியப்படுத்தி இருந்தது.

ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை இந்திய அணி வெகு எளிதாக வீழ்த்தி வென்று தற்போது தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் இரண்டு போட்டியில் ஒன்றை வென்றாலும் இந்திய அணி தொடரை வென்று விடும்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரிய பலமாக இருந்து வருவது அவர்களுடைய துவக்க ஜோடி மட்டும்தான். அவர்கள் எப்படியும் தவறாமல் ஐம்பது ரன்களுக்கு மேல் கொண்டு வந்து விடுகிறார்கள். மேலும் அவர்கள் விளையாடும் முறை இங்கிலாந்துக்கு நல்ல நம்பிக்கையையும் அடித்தளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இங்கிலாந்தின் டாப் ஆர்டர் தவிர வேறு யாரும் அணிக்கு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய அளவில் விளையாடுவதில்லை. கீழ் வரிசையில் ஸ்டோக்ஸ் கொஞ்சம் விளையாடி இருந்தாலும் கூட, அது இங்கிலாந்துக்கு ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடும் பாஸ்பால் அணுகுமுறை பெரிய விமர்சனத்திற்கு உள்ளாக இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக இருப்பதில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் முக்கியமான அணிகள். இந்த நிலையில் பகையை மறந்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் இங்கிலாந்து அணி வெல்வதற்கான தனது ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க : “ஜூனியர் விராட் கோலிதான் என்னுடைய குரு” – சீனியர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட அசத்தல் தகவல்

இதுகுறித்து ஆரோன் பின்ச் கூறும்பொழுது ” இங்கிலாந்து அணிக்கு ஆட்ட விழிப்புணர்வு தேவை. அவர்களுக்கு அவர்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கத்தை தருகிறார்கள். ஆனால் அவர்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. எனவே அவர்கள் தங்கள் விளையாட்டு அணுகுமுறையின் பெருமையை கைவிட்டு, ஆட்ட விழிப்புணர்வுடன் கொஞ்சம் பொறுமையாக ஸ்கோர் செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்தியாவை வீழ்த்த முடியாது” எனக் கூறியிருக்கிறார்.