இரண்டாவது நாள் ஆட்டத்தில் அக்சர் அஸ்வின்-அபாரம் ! இந்தியாவை பழி தீர்க்கும் ஆஸ்திரேலியா ?

0
1580

பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடர் கடந்த ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்கியது . முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி சிறப்பாக வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கியது . ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

- Advertisement -

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா 33 ரண்களும் விராட் கோலி 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர் . ரவீந்திர ஜடேஜா 26 ரன்களில் ஆட்டம் இழந்தார் . ஒரு கட்டத்தில் இந்திய அணி 139 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது . இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது .

8வது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய அக்சர் பட்டேல் இந்த டெஸ்ட் போட்டியிலும் அரை சதம் அடித்தார் . அவருக்கு பக்க பலமாக நின்று அஸ்வின் ஆடிக் கொண்டிருந்தார் . இந்த ஜோடியின் அபார் ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது . இந்த இருவரும் எட்டாவது விக்கெட்க்கு நூறு ரண்களுக்கு மேல் சேர்த்து இருந்த நிலையில் பேட் கமெண்ட்ஸ் வீசிய பந்துவீச்சில் 37 ரன்கள் எடுத்திருந்த அஸ்வின் ஆட்டம் இழந்தார் . அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அக்சர் பட்டேல் 74 ரன்கள் எடுத்திருந்தபோது மர்பி பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். 115 பந்துகளை சந்தித்து ஆடிய அக்சர் பட்டேல் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இறுதி விக்கெட் ஆக முகமது சமி அவுட் ஆக இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதனால் ஆஸ்திரேலியா அணி ஒரு ரன் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் லியான் 5 விக்கெட்டுகளையும் டாட் மர்பி மற்றும் குன்னமென் இரண்டு விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது. அந்த அணியின் டிராவீஸ் ஹெட் சிறப்பாக ஆடி 39 ரன்கள்டனும் மார்னஸ் லபுசேன் 16 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . இந்திய அணிக்காக ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் .

- Advertisement -