“கம்மின்ஸ்க்கு 20.50 கோடி.. சர்பராஸை யாருமே வாங்கல.. வெட்டேரி செய்தது என்ன நியாயம்?” – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
104
Cummins

17ஆவது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகம் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிக அதிகபட்ச தொகை.

- Advertisement -

இதற்கு அடுத்து மற்றும் ஒரு ஆஸ்திரேலிய வீரரான ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு தற்பொழுது பயிற்சியாளராக இருக்கும் டேனியல் வெட்டேரி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்து வரும் சர்ப்ராஸ் கானை நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணிகளுமே வாங்கவில்லை. தற்பொழுது அவரை எந்த அணியாவது வாங்குமா? என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதில் நான் ஆச்சரியமடைந்தேன். ஆரம்பத்தில் சர்பராஸ் கான் ஏலம் போகாததில் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவே ஏலம் தள்ளி நடந்திருந்தால் அவர் விற்று இருப்பார்.

- Advertisement -

இருப்பினும் ஏலம் என்பது கடந்த ஐந்து முதல் ஏழு வருடங்களில் வீரர்கள் எப்படி ஐபிஎல் தொடரில் இருந்து இருக்கிறார்கள் என்பதை வைத்து நடத்தப்பட வேண்டும். சர்ப்ராஸ் கான் மூன்று அணிகளால் வாங்கப்பட்டு இருக்கிறார்.

உண்மையாக பார்த்தால் அவருக்கு விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை ஏலத்தில் யாரும் எடுக்காததுஅந்த நேரத்தில் ஆச்சரியமாகத் தெரியவில்லை. அதனால்தான் இது சம்பந்தமாக எந்த விவாதமும் இல்லை.

இதையும் படிங்க : ஐபிஎல்லை விட உள்ளூர் கிரிக்கெட் தான் முக்கியம்.. மேத்யூ வேட் எடுத்த முடிவு.. வியப்பில் ரசிகர்கள்

இப்போது அவரை நாம் நிச்சயம் பேசுகிறோம். உலகக்கோப்பையை வென்ற பேட் கம்மின்ஸை பேசுவது போல, தற்பொழுது நன்றாக விளையாடும் அவர் குறித்தும் பேசுகிறோம். ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற அவரை, டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா கேப்டனாக யாரும் நியமிக்கவில்லை. அவருக்கு கிடைத்த பணம், டேனியல் வெட்டேரி தனக்காக ஏலத்தில் 20.50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருந்தார் என்பது தனிக்கதை” இன்று விமர்சனம் செய்திருக்கிறார்.