அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை அணி தக்க வைக்கப் போவது இந்த நான்கு வீரர்களை தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
155
Aakash Chopra and CSK

ஐபிஎல் தொடர் நாளை முதல் சிறப்பாக தொடங்க உள்ளது. கொரோனா கரணமாக தள்ளிப்போன இந்த தொடர் தற்போது மீண்டும் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்திலேயே இரண்டு வலுவான அணிகள் மோதுகின்றன. சென்னை மற்றும் மும்பை அணிகள் நாளை இரவு பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. இரண்டு அணிகளுமே சிறப்பான அணியாக வருவதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் உள்ள சக்தி வாய்ந்த வீரர்கள். ஆனால் இந்த வீரர்கள் இணைந்து பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகத்தான் இருக்கும். காரணம் அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் வருவதால் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு விரல்களை தான் தக்கவைக்க முடியும் என்ற சூழல் உருவாகும்.

அப்படி அடுத்த ஆண்டு நடக்க இருக்கிற தொடருக்கு முன்பாக சென்னை அணி எந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய அவர் சென்னை அணி நிச்சயமாக அடுத்த தொடருக்கு முன்பாக கேப்டன் தோனியை தக்கவைக்கும் என்று கூறியுள்ளார். தோனி மூன்றாண்டு காலம் சென்னை அணிக்கு விளையாடும் முடியாவிட்டாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் நிச்சயம் சென்னை அணியில் தோனி தக்கவைக்கும் என்று கூறியுள்ளார். டோனி இல்லாத சென்னை அணி உயிரற்ற உடல் போன்று காட்சி தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இரண்டாவதாக சென்னை அணி நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஜடேஜாவே விரும்பி வேறு ஏதாவது அழைத்துச் செல்ல ஆசைப்பட்டால் ஒழிய நிச்சயம் சென்னை அணி ஜடேஜாவை வேறு அணிக்கு விடாது என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் வருவதால் அதில் நிச்சயம் ஜடேஜா ஒரு அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று கருத்துக்கள் வந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மூன்றாவதாக மற்றும் நான்காவதாக சென்னை அணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சகர் மற்றும் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆனால் சுரேஷ் ரெய்னாவை தக்கவைக்கும் என்று அவர் கூறினார். இவர்களை ஏலத்திற்கு முன்பே தக்க வைக்க முடியாவிட்டாலும் RTM பயன்படுத்தி அணிக்குள் இணைத்து விட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறியது போலவே இந்த நான்கு வீரர்களை தான் சென்னை அணி தக்க வைக்குமா அல்லது வேறு யாரையும் தக்க வைத்துக்கொள்ளும் என்று ரசிகர்கள் ஆவலுடன் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -