இந்திய அணிக்கு நம்பர் 3ல் விளையாட இவர் தான் சரியானவர் – ஆகாஷ் சோப்ரா தேர்வு

0
199
Aakash Chopra

இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டி தொடர்களிலும் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணி நிர்ணயித்த 378 ரன் இலக்கை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு விரட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி!

இதையடுத்து இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று இரவு பத்தரை மணிக்கு செளத்தாம்படனில் நடக்கிறது. இரண்டாவது போட்டி 9ஆம் தேதி பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்திலும், மூன்றாவது போட்டி 10ஆம் தேதி நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்திலும் நடக்கிறது. கோவிட் தொற்றிலிருந்து மீண்ட ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார்.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் டி20 போட்டிக்கு, டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர், ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அடுத்த இரண்டு டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளார்கள்.

தற்போது இந்திய டி20 அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களைக் கூறி இருக்கிறார். அதில் “நான் பேட்டிங்கில் மூன்றாவது இடத்திற்கு தீபக் ஹூடாவைத்தான் வைப்பேன். அவர் அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டியில் சதம் அடித்தார், இன்னொரு போட்டியில் கிட்டத்தட்ட அரைசதம் அடித்தார். அவர் முற்றிலும் சிறப்பான வீரர்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அடுத்து நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவையும், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்ட்யாவையும், ஆறாவது இடத்தில் தினேஷ் கார்த்திக்கையும் தேர்ந்தெடுப்பேன். ஏழாவது இடத்திற்கு ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்சர் படேலை பரிந்துரைப்பேன். இவரோடு சுழற்பந்திற்கு சாஹல். மேலும் வேகப்பந்து கூட்டணிக்கு என் தேர்வு புவனேஷ்வர்குமார், ஆவேஷ்கான், ஹர்சல் படேல் மூவரும்தான்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

முதல் டி20 போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், ஆவேஷ்கான், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.