“இவர் தான் இந்திய அணியின் ரஷீத் கான்” – முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டு

0
698
Rahul Chahar Team India

இந்திய அணியின் முன்னால் தொடக்க வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தற்போது இலங்கையில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் சஹரை வெகுவாக பாராட்டியுள்ளார் அவர் கூறுகையில் பந்துவீச்சு ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானின் பந்துவீச்சை நினைவூட்டுகிறது என்று அவரை பாராட்டியுள்ளார்.

ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இறுதிப்போட்டியில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சேனல் அனைவரையும் கவர்ந்துள்ளார் அவர் விளையாடிய ஒரே ஒரு ஒருநாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களை தனது யூடுப் பக்கத்தின் மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் நம்பர் 1 லெக் ஸ்பின்னர் ஆக இருப்பதினால் ராகுல் சஹருக்கு இந்திய அணியின் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தார் ஆகிய இருவரும்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஸ்பின்னர்ஸ். தற்போது வரும் சக்கரவர்த்தி மிஸ்டரி பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் ராகுல் சாஹரோ கிடைத்த வாய்ப்பை எல்லாம் தன் வசமாக்கி அனைத்து வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Rahul Chahar India

சஹார் வீசும் பந்துவீச்சு மிக துல்லியமாக இருக்கிறது அது அவருடைய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. வேகமாக பந்து வீச கூடிய திறனைக் கொண்டுள்ளதால் பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சை சமாளிக்க சற்று சிரமப்படுகிறார்கள். இவருடைய பந்துவீச்சு திறனை பார்க்கையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை எனக்கு நினைவூட்டுகிறது. இவர் தொடர்ந்து ஐ.பி.எல்லில் சிறப்பாக செயல்பட்டார் என்றால் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இவருக்கு இடம் உண்டு.

குல்-சா காமினேஷனுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

அதே சமயத்தில் குல்-சா காமினேஷனை மறந்துவிடாதீர்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு இவர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் இருவரும் இலங்கை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார்கள்.சஹல் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களையும் , 1 டி20 போட்டிகளில் விளையாடி 1 விக்கெடையும் வீழ்த்தினார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தல 2 ஆட்டங்கள் விளையாடிய குல்தீப் யாதவ் ஒருநாள் தொடரில் 1 விக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். இந்த நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குல்தீப் யாதவிற்க்கு ஆதரவு அளித்து நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். போட்டியில் விளையாட விளையாடவே வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.