சகோதரர்களாய் கிரிக்கெட் விளையாடிய 12 பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சிறந்த அணி

0
3130
Marshall Brothers and Waugh Brothers

கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது முதல் தற்போது பல்வேறு மாற்றங்களைப் கண்டு வருகிறது. ஆண் காரணமாக பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. T20, ipl போன்று ரசிகர்களை ஈர்க்கும் பல்வேறு பல்வேறுவிதமான புதுமைகளை கொண்டுள்ளதால் நாளுக்கு நாள் அதிக பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு பேர் கிரிக்கெட் விளையாட வருவது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. ஆனால் அப்படி வந்த வீரர்கள் சர்வதேச அறைக்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து நிற்பது சற்று ஆச்சரியமான விஷயம்தான். அப்படி சகோதரர்களாக இணைந்து சர்வதேச அணிகளுக்கு ஆடிய முக்கியமான 12 வீரர்கள் கொண்ட அணி குறித்து தற்போது பார்ப்போம்.

துவக்க வீரர்கள் – மார்க் வாக் மற்றும் பாபா அப்ரஜித்

90களின் ஆரம்பகட்ட ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த இணை ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக் சகோதரர்கள். அதேபோல தமிழக அணியின் மிகச்சிறந்த சகோதரர்கள் யார் என்.று பார்த்தால் பாபா அப்ரஜித் மற்றும் பாபா இந்திரஜித் ஆகும். அப்பரஜித் சகோதரர்கள் இந்திய அணிக்குள் தற்போது நுழைய முடியா விட்டாலும் விரைவில் அவர்களுக்கான கதவு திறக்க காத்திருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர் ஆன மார்க் வாகும் தமிழக வீரரான பாபா அப்ரஜித்தும் இந்த அணியின் துவக்க வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

மிடில் ஆர்டர் – ஹமிஷ் மார்ஷல், ஜேம்ஸ் மார்ஷல், சுல்தான் ரானா, பாபா இந்திரஜித்

இந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்களை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹமிஷ் மார்சல் மற்றும் ஜேம்ஸ் மார்சல் உள்ளனர். இவர்கள் இருவரும் ஐடெண்டிகல் டிவின்ஸ். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த இருவரும் ஒரே நேரத்தில் ஆட வந்த பொழுது இரண்டு வீரர்களுக்கும் இடையில் ஒருவரால் கூட வித்தியாசம் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த அணியின் விக்கெட் கீப்பராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சுல்தான் ரானா செயல்படுவார். மற்றொரு மிடில் ஆர்டர் வீரராக பாபா அப்ரஜித்தின் சகோதரர் பாபா இந்திரஜித் விளையாடுவார்.

ஆல்ரவுண்டர்கள் – ஸ்டீவ் வாக் மற்றும் கிரெய்க் ஓவர்ட்டன்

இந்த அணிக்கு ஆல்ரவுண்டர் அல்லாத முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் செயல்படுவார். மேலும் இந்த அணியின் கேப்டனும் அவர்தான். மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணியை வடிவமைத்துக் கொடுத்த கேப்டன் இவர்தான். இரண்டாவது ஆல்-ரவுண்டராக இங்கிலாந்து அணியின் கிரெய்க் ஓவர்டன் செயல்படுவார். இவர் இங்கிலாந்து அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்.

பந்துவீச்சாளர்கள் – அலெக் பெட்சர், எரிக் பெட்சர் மற்றும் ஜெமி ஓவர்ட்டன்

இந்த அணியின் பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக் பெட்சர் மற்றும் எரிக் பெட்சர் இருவரும் செயல்படுவர். இதில் அலெக் பெட்சர் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஒருவர். தான் ஓய்வு பெறும்போது இங்கிலாந்து அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையோடு ஓய்வு பெற்றவர். இவர் சகோதரர் எரிக் பெட்சர் இங்கிலாந்து அணிக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாடியவர். மற்றொரு பந்து வீச்சாளரான ஓவர்டன்னும் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஒருவர்.

- Advertisement -

12-வது வீரர் – அஸ்மத் ரானா

இந்த அணியின் 12 ஆவது வீரராக பாகிஸ்தான் அணியின் அஸ்மத் ராணா செயல்படுவார் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர் இவர்.

சிறந்த சகோதரர்கள் அணி – மார்க் வாக், பாபா அப்ரஜித், ஹமிஷ் மார்ஷல், ஜேம்ஸ் மார்ஷல், சுல்தான் ரானா, பாபா இந்திரஜித், ஸ்டீவ் வாக், கிரெய்க் ஓவர்ட்டன், அலெக் பெட்சர், எரிக் பெட்சர், ஜெமி ஓவர்ட்டன் மற்றும் அஸ்மத் ரானா.