“இந்தியாவை அடிக்க வந்த போன்கால்.. அஷ்வினுக்கு சவால்” – 20 வயது இங்கிலாந்து வீரர் அதிரடி பேச்சு!

0
313
Ashwin

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் வைத்து இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு 1 1/2 மாதங்கள் இருக்கும் பொழுதே இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக் குழு தங்களது அணியை அறிவித்துவிட்டது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நீடிக்கிறார். மூத்த அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் தொடர்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால் சுழல் பந்துவீச்சு துறையை வலிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ஈடுபட்டு இருக்கிறது.

இதன் காரணமாக இருபதே வயதான, சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அற்ற, 6 உள்நாட்டு போட்டிகளில் 10 விக்கெட் மட்டுமே வீழ்த்திய சோயப் பசீர் என்ற இளம் ஆப் ஸ்பின்னரை இந்தியத் தொடருக்கு இங்கிலாந்து தரப்பு கொண்டு வந்திருக்கிறது.

இவர் தன்னிடம் ஆப் ஸ்பின்னில் நிறைய வகைகள் இருப்பதாகவும், இதைக் கொண்டு இந்தியாவில் தன்னால் சாதிக்க முடியும் என்றும், மேலும் இந்த வாய்ப்பு தனக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சோயப் பசீர் கூறும் பொழுது “இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் நான் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக ஒரு போன் கால் வந்தது. ஆரம்பத்தில் அதை நான் நம்பவில்லை. பிறகுதான் என்னுடன் பேசியது மெக்கலம் என்று தெரிந்தது.

உண்மையாக அது குறித்து என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இது நடந்து முடிந்த மூன்று நாட்கள் மேலாகிவிட்டது. இது மிகவும் சிறப்பான வாய்ப்பு. இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னிடம் ஆப் ஸ்பின்னில் அண்டர் கட்டர்,சைட் ஸ்பின்னிங் மற்றும் ஒரு ஆர்ம்பால் இருக்கிறது. நான் கேரம் வந்து வீச்சிலும் தற்பொழுது பயிற்சி செய்து வருகிறேன். இந்தியாவில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்!” என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!