“எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டி, அந்த ஒரு தவறை செய்திருக்கக் கூடாது” – வெற்றிக்குப் பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

0
221

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் பதினாறாவது சீசன் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனுக்கு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி ஆரம்பத்திலேயே டேவால் கான்வே விக்கெட்டை இழந்தாலும் இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் மொயின் அலி பவர் பிளேவில் அருமையான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு நெருக்கடிகளை கொடுத்த போதும் மறுமுனையில் ருத்ராஜ் அட்டகாசமாக ஆடி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 178 ரண்களை குவித்தது. அந்த அணியில் ருத்ராஜ் கெயிக்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணிக்கு தனது அதிரடியான பேட்டிக்கின் மூலம் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.சுப்மண் கில் . 35 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளின் உதவியுடன் 63 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் அதிரடியாக ஆடிய ரஷீத் கான் மற்றும் திவாட்டியாவின் அபாரமான ஆட்டத்தினால் குஜராத் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரஷித் கான் 3 பந்துகளில் 10 ரன்கள்டனும் திவாட்டியா 14 பந்துகளில் 15 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ” முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் எங்களை கடினமான சூழ்நிலைக்கு தள்ளினோம். திவாட்டியா மற்றும் ரஷீத் இறுதியில் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். முதல் பேட்டிங் முடிந்தபோது நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம். சிஎஸ்கே அணி மிகச் சிறப்பாக ஆடியதால் 200 ரண்களை கடந்து விடுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் சிறப்பாக பந்து வீசி அவர்களை 200 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது”என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த ஆடுகளத்தில் ஹார்ட் லென்த் பந்துகளை வீசுவது ரண்கள் எடுப்பதற்கு கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். அதற்காகவே அல்சாரி ஜோசப்பை பின் வரிசையில் பந்து வீச அழைத்தேன். ரசித் கான் எந்த ஒரு அணிக்கும் மிகப்பெரிய சொத்து. அவர் உங்களுக்கு விக்கெட்களையும் எடுத்துக் கொடுப்பார். அதேநேரம் பின் வரிசையில் களம் இறங்கி தேவையான ரண்களையும் எடுத்து தருவார். இந்தப் போட்டியில் நானும் சுப்மண் கில்லும் ஆடிய தவறான ஒரு ஷாட் பின் வரிசை ஆட்டக்காரர்கள் வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்கு அணியை தள்ளி விட்டது. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு டாப் பார்டர் பேட்ஸ்மன்கள் அதிக பொறுப்புணர்ந்து ஆட முயற்சிப்போம் என தெரிவித்தார்.