“ராஜா என்றுமே ராஜா தான்” ! அவருக்கு எதிராக எங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை – லக்னோ வீரர் மார்க் வுட் பேட்டி!

0
160

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 8 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை அணி லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தத் தொடரின் முதல் வெற்றியை பெற்றது. டேட்டிங்கில் ருத்ராஜ் மற்றும் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பந்து வீச்சில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டிற்கான கணக்கை சிஎஸ்கே அணி துவங்கியது. டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் தனது அசுரத்தனமான பந்து வீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மார்க் வுட். முன்னாள் சிஎஸ்கே வீரரான இவர் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிலும் குறிப்பாக கேப்டன் எம் எஸ் தோனி இவரது ஓவரில் அடித்த இரண்டு சிக்ஸர்கள் சென்னை மைதானத்தை அதிரசெய்தது. அதனைப் பற்றி தற்போது பேசியிருக்கிறார் லக்ன அணியின் பந்துவீச்சாளர் மார்க் வுட் .

இதுபற்றி பேட்டியில் கூறியிருக்கும் மார்க் வுட் ” எம் எஸ் தோனி சிக்ஸர் அடித்த பந்து ஷாட் பீச் பாலாக வீசப்பட்டது. ஆஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்து நல்ல வேகத்தில் மேல் எழும்பி வந்தது. தோனி தனது பலமான மணிக்கட்டுகளைக் கொண்டு அந்தப் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அது ஒரு அசாத்தியமான ஷாட். அந்தப் பந்தை அவர் எவ்வாறு சிக்ஸ் இருக்கு அடித்தார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அது ஒரு அசாத்தியமான ஷாட் என குறிப்பிட்டு இருக்கிறார் மார்க் வுட்.

மேலும் இது பற்றி பேசிய அவர் ” நானும் கேப்டன் ராகுலும் எந்த இடத்தில் தோனிக்கு பந்து வீச வேண்டும் என்று நினைத்தோமோ அதே இடத்தில் வீசினோம். எங்களது திட்டத்தை மிகச் சரியாக அவருக்கு எதிராக செயல்படுத்தினோம். ஆனால் தோனி மிகவும் அற்புதமான ஒரு ஷாட் மூலம் அந்தப் பந்தை எளிதாக சிக்ஸருக்கு விரட்டி விட்டார். டோனி ஆட வந்த உடனேயே என்னுடைய திட்டங்களை பற்றி கேப்டன் இடம் விவாதித்தேன். அவரும் நான் நினைத்தவரை செயல்படுத்த சொன்னார். நானும் செயல்படுத்தினேன். இரண்டு பந்துகளில் சிக்ஸர்களுக்கு சென்ற பிறகு எனக்கு எம் எஸ் தோனியின் விக்கெட் கிடைத்தது. அதற்கு முன்பே அவரது விக்கெட் எனக்கு கிடைத்திருக்கும். அந்தப் பந்தில் அவர் மிகவும் அற்புதமாக ஆடி சிக்ஸர் அடித்தார் என்று கூறினார் வுட்.

- Advertisement -