ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணி ஜெயிக்க ஆகாஷ் சோப்ரா சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
சொந்த மண்ணில் ஆர்சிபி பரிதாபம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான அணியாக இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக இருப்பதால் இந்த தொடரில் மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகள் வெற்றி மற்றும் மூன்று போட்டிகள் தோல்வி என புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இதில் பெங்களூர் அணிக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் வெளி மைதானங்களில் வெற்றி பெறும் பெங்களூர் அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.
சின்னசாமி மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் சொந்த மண்ணிலும் சில போட்டிகள் வெற்றி பெறுவது அந்த அணிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த சூழ்நிலையில் சொந்த மண்ணில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவருக்கு இந்த வாய்ப்பை கொடுங்க
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறது. வெளி மாநிலங்களில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சொந்த மண்ணில் இன்னும் ஒரு போட்டியில் கூட ஏன் வெற்றி பெறவில்லை? இன்று அவர்கள் விளையாட தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன். போட்டியின் சமநிலையை நோக்கி பெங்களூர் அணி சாய்ந்துள்ளது. நிலைமைகளை கொஞ்சம் மதிப்பிட்டு டாஸ் வென்றால் போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் செஞ்சது ரொம்பவே ஆச்சரியம்.. தரமான ஒரு பிளேயரை வெளியே விட்டா எப்படி ஜெயிப்பீங்க – அனில் கும்ப்ளே கேள்வி
முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்யவில்லை என்றால் எந்த பதட்டமும் ஏற்படாது, முதலில் எதிர் அணிகளை பேட்டிங் செய்ய வையுங்கள். எதிர் அணி முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் சேஸ் மாஸ்டர் சேசிங்கில் வருவதால் விஷயங்கள் எளிதாகும். ரன் சேசிங்கில் விராட் கோலியின் அந்தஸ்து அதிகரிக்கிறது. எப்படியும் அவருக்கு இந்த அணி பிடிக்கும். ஜெய்பூரில் சிறப்பாக விளையாடிவிட்டு சொந்த மண்ணில் விளையாட வருகிறார்” என்று பேசி இருக்கிறார்.






