நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தோல்விக்கான காரணம் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே தொடர் தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனால் அப்போது களத்தில் இருந்த துவக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சசாங்க் சிங் அற்புதமாக விளையாடி போட்டியை பஞ்சாப் பக்கம் மீண்டும் திருப்பினார்கள். இறுதியில் பிரியன்ஸ் ஆர்யா 103 ரன்கள் மற்றும் சசாங்க் சிங் 52 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் அதற்குப் பின்னர் வெற்றியிலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பவர் பிளேவில் 60 ரன்கள் வரை நெருங்கினாலும் 10வது ஓவரில் தான் சென்னை அணி முதல் சிக்சரை அடித்தது. அதற்குப் பிறகு மிடில் வரிசை மீண்டும் ஸ்லோவாக இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கேவால் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காரணம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே கோச்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நேற்றைய போட்டியை பொறுத்தவரை ஃபீல்டிங்கில் நாங்கள் பெரிய தவறுகள் செய்தோம். சில நேரங்களில் அழுத்ததின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்கிற துல்லியம் இல்லை. பஞ்சாப் வீரர் ஆர்யாவின் சிறப்பான இன்னிங்சால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். ஆனால் அவரைக் கட்டுப்படுத்த நாங்கள் அதைவிட சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். அங்குதான் ஆட்டம் எங்களிடம் இருந்து விலகிச் சென்றது.
இதையும் படிங்க:17வது ஓவரை சகாலுக்கு கொடுக்க காரணமே இதுதான்.. அவர் மோசமானவர்னு நல்லா தெரியும் – ஸ்ரேயாஸ் ஐயர்
நீங்கள் ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டுமானால் பெரும்பாலான ரன்களை பெறுவதற்கு முதல் மூன்று வீரர்கள் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நாங்கள் அதைச் செய்யவில்லை. இருப்பினும் நேற்றைய போட்டியில் ஓரளவு நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியின் நடுவில் எங்களால் அதே வேகத்தில் விளையாட முடியவில்லை. காரணம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சாக கூட இருந்திருக்கலாம். போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும்” என்று அவர் பேசியிருக்கிறார்.






