நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 22 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் சிறப்பான வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரியன்ஸ் ஆர்யா சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் சதம் அடித்து இறுதியாக 42 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸ் என 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மிடில் வரிசையில் சஷாங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள், மார்க்கோ ஜான்சன் 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சிஎஸ்கே களம் இறங்கிய நிலையில், தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் மிடில் வரிசையில் போதிய அதிரடி இல்லாததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கான்வே 49 பந்துகளில் 69 ரன்கள், சிவம் துபே 42 ரன்கள் குவிக்க இறுதியில் எம்எஸ் தோனி 12 பந்துகளை எதிர் கொண்டு 27 ரன்கள் குவித்தார்.
வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் போது “நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் இதுதான் எங்கள் ஆட்ட முறையாக நிச்சயம் இருக்கும். எங்களிடம் இருக்கும் வலுவான பந்துவீச்சாளர்களும் பிரியான்ஷ் விளையாடிய விதமும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவர் அடித்த சதம் ஒரு உலகத்தரமான இன்னிங்ஸ் வகையாகும். கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான் ப்ரியன்ஸ் ஆர்யாவிடம் பேசினேன். அவர் ஆர்ச்சரின் பந்தில் எதிர்கொள்ளும் போது முடிவெடுப்பதில் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.( ஆர்ச்சரின் பந்தில் போல்ட் ) ஆனால் இன்று அவர் சுதந்திரமாக விளையாடினார், தனது உள்ளுணர்வை ஆதரித்தார். இந்த அணியில் உள்ள அனைவரும் இதே போன்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதையும் படிங்க:போட்டிக்கு முன்பே வீரர்களிடம்.. இதுல கவனமா இருக்க சொன்னேன்.. சரியா அங்கதான் சிக்கி தோற்றோம் – சிஎஸ்கே கேப்டன்
சிஎஸ்கே விளையாடும் போது டுபே மற்றும் கான்வே ஓரளவு செட்டாகி இருந்தனர். அந்த நேரத்தில் டுபேவுக்கு சகால் பந்து வீசினால் நிலைமை எப்படி மோசமாக இருக்கும் என்று உணர்ந்து அவருக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்தேன். அதனால் அடிப்படையில் அவருக்கு எதிராக வேகப்பந்து பேச்சாளர்களோடு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அது இன்று நன்றாகவே பலன் அளித்தது. நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடவில்லை. பதட்டங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே நேர்மறையாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று பேசி இருக்கிறார்.






