இந்தியா கிரிக்கெட் அணி கடத்த நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
சாம்பியன் ஆனா இந்தியா
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வி அடையாமல் வெற்றிகரமாக வலம் வந்துள்ளது. முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி கணக்கை துவங்கிய இந்திய அணி அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டி வரை தோல்வி அடையாமல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் போது “எங்களிடம் நம்ப முடியாத அளவிற்கு அணி உறுதியாக உள்ளது. அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட வீரர்களுடன் விளையாடும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்ன என்பது தெரியும். நிச்சயமாக மைதானத்தில் உணர்ச்சிகள் கட்டாயம் இருக்கும். சில நேரங்களில் நான் சோர்வடைவேன். இவை அனைத்துமே விளையாட்டின் உணர்வுகளில் தான் வெளிப்படும்.
ரோஹித் சர்மா உணர்ச்சிப் பேட்டி
களத்தில் பரிமாறப்படும் வார்த்தைகள் யாவும் ஒருவரை திட்டவோ அல்லது பெருமைப்படுத்துவோ இருக்காது. அவை அனைத்தும் எங்களின் ஆர்வத்தின் வெளிப்பாடு மட்டுமே. இறுதியில் வெற்றி பெறுவது மட்டும் தான் எங்கள் ஒரே குறிக்கோள். அதனை அடைய நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். ஐந்து டாஸ்களில் நாங்கள் தோல்வியடைந்த போது கூட போட்டியில் தோல்வியடையாமல் இருந்தோம். ஆனாலும் வெற்றிகரமாக கோப்பையை வென்று இருக்கிறோம்.
இதையும் படிங்க:ஐசிசி கோப்பைகள் அல்ல.. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் அடையாளம் இந்த விஷயம்தான் – ரவிச்சந்திரன் அஸ்வின்
5 போட்டியில் நாங்கள் எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை. ஒரு தோல்வி கூட இல்லாமல் போட்டியை வெல்வது என்பது மிகப்பெரிய சாதனை. இது தற்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கோப்பையை வெல்லும் வரை அதைப்பற்றி யாருமே சிந்திக்கவில்லை. வெற்றிக்கு பிறகு அது எங்களை தாக்கியது. நாங்கள் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றி பெற்றோம். அந்த உணர்வு சிறப்பாக உள்ளது. அது எப்படி இருக்கிறது என்பதை விவரிக்க வார்த்தைகளால் சொல்வது கடினமாக உள்ளது” என்று ரோகித் சர்மா பேசியிருக்கிறார்






