இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையை கைப்பற்றுவதற்கு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மாவின் பேட்டி முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
போட்டியை உணர்ந்த ரோகித்
ரோகித் சர்மா கடந்த சில ஆண்டுகளாகவே, தனது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக தாக்குதல் ஆட்டத்தை விளையாடி வருகிறார். ஒரு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு வெளியேறினால் அதற்கு பிறகு வரும் வீரர்கள் ஆட்டத்தை நன்றாக எடுத்துச் செல்வார்கள். எனவே இதை ரோகித் சர்மா ஒரு பாணியாக கடைப்பிடித்து கடந்த டி20 உலக கோப்பையிலும் அதனை செயல்படுத்தி இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
அதேபோல லீக் ஆட்டங்களில் அதே பாணியில் ஆன ஆட்ட முறையை விளையாடிய ரோஹித் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியை மனதில் வைத்து சற்று நிதானம் காட்டினார். கடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விரைவாக வெளியேறியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனவே அதனை தவிர்க்கும் விதமாக போட்டியை கடைசி வரை ரோகித் சர்மா எடுத்துச் சென்றது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசியிருக்கிறார்.
வழக்கமான ரோஹித் சர்மா இல்லை
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது ” மிகப்பெரிய மரபு என்பது போட்டிகளை வெல்வது அல்ல. ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 கோப்பைகளை வென்றுள்ளார். தற்போது இது அவருக்கு இரண்டாவது ஐசிசி கோப்பையாகும். ரோகித் சர்மா இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பேட்டிங் எல்லையை மாற்றியுள்ளார். அதுவே அவரது மிகப் பெரிய பாரம்பரியம் ஆகும்.
இதையும் படிங்க:ரவீந்திர ஜடேஜா இல்லை.. இனி கிரிக்கெட் உலகின் சிறந்த பீல்டர் இவர்தான்.. ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்
இது வழக்கமான ரோகித் சர்மா இல்லை என்று நான் நிச்சயம் கூறுவேன். கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதம் போல் இல்லை. நேற்றைய போட்டியில் அவர் விளையாடிய அனைத்துமே அளவிடப்பட்ட ஷாட்கள். இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்ற நாதன் ஸ்மித் புதியவர் என்பது அவருக்கு தெரியும். எனவே ரோகித் சர்மா அவரை சரியாக தாக்கி விளையாடினார். அதற்குப் பிறகு அவர் பந்து வீச ரோஹித் சர்மா அனுமதிக்கவில்லை” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.






