89 வருடம்.. புது வரலாற்று சாதனையை படைத்த சாய் சுதர்சன்.. அசத்தல் பேட்டிங்!

0
2652
Sai

இன்று தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொண்டன.

இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்காவின் இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது.

- Advertisement -

இரண்டாவது ஓவரில் அர்ஸ்தீப்சிங், ரீசா ஹென்றி மற்றும் வாண்டர் டேசன் இருவரையும் ரன் கணக்கை துவங்கும் முன்பே அனுப்பி வைத்தார். இது அப்படியே மொத்தத்தில் ஆப்பிரிக்காவின் பேட்டிங் யூனிட்டயும் பாதித்தது.

இறுதியாக 27.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 116 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்தியாவின் அர்ஸ்தீப் சிங் ஐந்து விக்கெட் கைப்பற்ற, மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ் கான் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் தருவதற்கு ருதுராஜ் மற்றும் அறிமுகப் போட்டியில் விளையாடும் சாய் சுதர்சன் இருவரும் வந்தார்கள். ருதுராஜ் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

சாய் சுதர்ஷன் கவர் டிரைவில் கவர் திசையில், பவுண்டரி மூலம் சந்தித்த முதல் பந்திலேயே ரன் கணக்கை துவக்கி, தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அந்த அதிரடி அப்படியே தொடர்ந்தது, 41 பந்துகளில் எட்டு பவுண்டர்கள் உடன் அவர் தனது அறிமுக போட்டியில் அசத்தலாக முதல் அரை சதத்தை அடித்தார். இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற அவர் 43 பந்தில் 55 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

சாய் சுதர்ஷன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக சதம் அடித்ததின் மூலம், இந்தியாவுக்காக அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 17வது வீரராக இணைந்திருக்கிறார்.

மேலும் இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் அரை சதம் அடித்த முதல் தமிழக வீரராக தன் பெயரை பொரித்திருக்கிறார். தமிழக கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

1934 ஆம் வருடம் எம்ஜே.கோபாலன் என்பவர் அப்போது அமைக்கப்பட்ட இந்திய அணியில் முதல் தமிழக வீரராக களம் கண்டார். அங்கிருந்து 89 வருடங்கள் கழித்து, தமிழக வீரர் ஒருவர் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக அரைசதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -